10th தமிழ் இயல் 8.3 காலக்கணிதம்

10th தமிழ் இயல் 8.3 காலக்கணிதம்
: :

1. "கவிஞன் யானோர் காலக்கணிதம்" என்ற பாடலின் ஆசிரியர் யார்? கண்ணதாசன்
2. அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன் என்றவர் யார்? கண்ணதாசன்
3. காலக்கணிதம் என்ற கவிதை தொகுப்பு யாருடைய கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது? கண்ணதாசன் கவிதை தொகுப்பு
4. கண்ணதாசன் இயற்பெயர் என்ன? முத்தையா
5. கண்ணதாசன் எந்த ஊரில் பிறந்தவர்? சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம்
6. கண்ணதாசனின் பெற்றோர் யாவர்? சாத்தப்பன், விசாலாட்சி
7. கண்ணதாசனின் முதல் பாடல் எது? கலங்காதிரு மனமே, 1949 ஆம் ஆண்டு
8. திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் யார்? கண்ணதாசன்
9. கண்ணதாசனின் எந்த நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது? சேரமான் காதலி
10. தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டவர் யார்? கண்ணதாசன்
11. "நதிவெள்ளம் காய்ந்து விட்டால் நதிசெய்த குற்றம் இல்லை" என்ற பாடல்வரியை கூறியவர் யார்? கண்ணதாசன்
12. "நதியின் பிழையன்று நறும்புனலின்மை அன்றே" என்ற பாடல்வரியை கூறியவர் யார்? கம்பன்