10th தமிழ் இயல் 8.2 பெருவழி - ஞானம்
1. ஞானம் என்ற கவிதையின் ஆசிரியர் யார்? தி. சொ. வேணுகோபாலன்
2. ஞானம் என்ற கவிதை தி. சொ. வேணுகோபாலனின் எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது? கோடை வயல்
3. தனக்கான பணிகளோ உலகிற்கான பணிகளோ அவை அறம் சார்ந்து வளரவேண்டும் என்றவர் யார்? தி. சொ. வேணுகோபாலன்
4. கோடை வயல் தொகுப்பு யாரால் இயற்றப்பட்டது? வேணுகோபாலன்
5. வேணுகோபாலன் எங்கு பிறந்தார்? திருவையாறு
6. மீட்சி விண்ணப்பம் என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர்? தி. சொ. வேணுகோபாலன்
7. மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசியராக பணியாற்றியவர் யார்? தி. சொ. வேணுகோபாலன்
8. வேணுகோபாலன் எந்த கால புதுகவிஞர்களில் ஒருவர்? எழுத்து
9. "சாளரத்தின் கதவுகள், சட்டம் காற்றுடைக்கும்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? தி. சொ. வேணுகோபாலன்
10. அறப்பணி ஓய்வதில்லை! ஓய்ந்திடில் உலகமில்லை! என்று கவிதை புனைந்தவர் யார்? தி. சொ. வேணுகோபாலன்