10th தமிழ் இயல் 8.5 பா-வகை-அலகிடுதல்
1. யாப்பு எத்தனை உறுப்புகளைக் கொண்டது? ஆறு உறுப்புகள்
2. யாப்பின் ஆறு உறுப்புகள் யாவை? எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை
3. பா எத்தனை வகைப்படும்? 4 வகை
4. நான்கு வகையான பாக்கள் யாவை? வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
5. ஓசை எத்தனை வகைப்படும்? நான்கு (செப்பல், அகவல், துள்ளல், தூங்கள்)
6. வெண்பாவிற்கு உரிய ஓசை என்ன? செப்பல் ஓசை
7. திருக்குறள், நாலடியாரில் இடம்பெற்றுள்ள பாவகை? வெண்பா
8. ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை என்ன? அகவல் ஓசை
9. இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது? அகவற்பா என்னும் ஆசிரியப்பா
10. சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களில் இடம்பெற்றுள்ள பாவகை? அகவற்பா (ஆசிரியப்பா)
11. செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவம் ஓசை? துள்ளல் ஓசை
12. கலிப்பாவிற்கு உரிய ஓசை எது? துள்ளல் இசை
13. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை எது? தூங்கல் இசை
14. வெண்பா எத்தனை வகைப்படும்? 5 வகைப்படும் அவை (குறள், சிந்தியல், நேரிசை, இன்னிசை, பஃறொடை வெண்பா)
15. ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்? நான்கு வகைப்படும் அவை (நேரிசை, இணைக்குறள், நிலைமண்டில, அடிமறிமண்டில ஆசிரியப்பா)
16. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும் பா வகை எது? வெண்பா
17. ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும் பா வகை எது? ஆசிரியப்பா (அகவற்பா)
18. இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும் பா எவ்வகை? வெண்பா
19. மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும் பா எவ்வகை? ஆசிரியப்பா (அகவற்பா)
20. ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடியும் பா எவ்வகை? வெண்பா
21. ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு எவ்வகை பா? ஆசிரியப்பா (அகவற்பா)
22. யாப்பதிகாரத்தை இயற்றியவர் யார்? புலவர் குழந்தை
23. ஓரசைச் சீர்: நேர்- நாள்
24. நிரை -மலர்
25. நேர்பு -காசு
26. நிரைபு - பிறப்பு
27. ஈரசைச் சீர்: நேர் நேர் - தேமா
28. நிரை நேர் - புளிமா
29. நிரை நிரை- கருவிளம்
30. நேர் நிரை - கூவிளம்
31. மூவசைச் சீர்: நேர் நேர் நேர் - தேமாங்காய்
32. நிரை நேர் நேர்- புளிமாங்காய்
33. நிரை நிரை நேர் - கருவிளங்காய்
34. நேர் நிரை நேர் - கூவிளங்காய்
35. நேர் நேர் நிரை - தேமாங்கனி
36. நிரை நேர் நிரை - புளிமாங்கனி
37. நிரை நேர் நிரை - கருவிளங்கனி
38. மேன்மை தரும் அறம் என்பது? - கைமாறு கருதாமல் அறம் செய்வது
39. "வீட்டைத் துடைத்து சாயம் அடித்தல்" இவ்வடி குறிப்பிடுவது? இடையறாது அறப்பணி செய்தலை
40. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பை கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்? அதியன்; பெருஞ்சாத்தன்
41. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்? இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
42. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்? அகவற்பா
43. 'மரம் தேடிய களைப்பு மின்கம்பியில் இளைப்பாறும் குருவி' என்ற கவிதையின் ஆசிரியர் யார்? நாணற்காடன்
44. 'விற்பனையில் காற்றுப் பொட்டலம் சிக்கனமாய் மூச்சு விடவும்' என்ற கவிதையின் ஆசிரியர் யார்? புதுவைத் தமிழ் நெஞ்சன்
45. 'கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த' என்ற வரியை பாடியவர் யார்? வள்ளலார்
46. கான் அடை என்பதன் பொருள் என்ன? காட்டைச் சேர்
47. கான் நடை என்பதன் பொருள் என்ன? காட்டுக்கு நடத்தல்
48. கால் நடை என்பதன் பொருள் என்ன? காலால் நடத்தல்
49. belief ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? நம்பிக்கை
50. renaissance ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? மறுமலர்ச்சி
51. philosopher ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? மெய்யியலாளர்
52. revivalism ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? மீட்டுருவாக்கம்
53. அறமும் அரசியலும் நூலின் ஆசிரியர் யார்? மு. வரதராசனார்
54. அபிக்கவிதைகள் என்ற நூலின் ஆசிரியர் யார்? அபி