வாடிவாசல் - 2 Mins Book Review with Audio
வாடிவாசல் சி.சு.செல்லப்பா
அம்புலித் தேவனோட வயிறு கிழிஞ்சி குடல் வெளிய வந்துட்டது. காரி குத்தோட வேகம் அந்த மாதிரி. அதுக்கு அப்புறம் என்னன்ன வயிறு சீழ் பிடிச்சி ஒரு ஆறு மாசத்துல அம்புலி செத்து போயிடுறான்.
தன் அப்பன் சாவுக்கு காரணமான காரிய பழிவாங்க அம்புலியோட மகன் பிச்சி கிளம்புறான். கூடவே பிச்சியின் மச்சான் மருதனும் போறான்.
மொக்கையத் தேவரோட இருந்த காரி இப்ப பெரியப்பட்டி சமீன்தார் கூட இருக்கிறத தெரிஞ்சிகிறான் பிச்சி.
பெரியப்பட்டி சமீன்தார் காரிக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறதயும் இப்ப அவங்க ரெண்டு பேரும் இருக்கிற இடத்தையும் தெரிஞ்சிக்கிறாங்க பிச்சியும் மருதனும்
காரியை பழவாங்க சரியான இடம் இதுதான்னு பிச்சியும் மருதனும் (பிச்சியும் மருதனும் என்ன பண்ண பொறாங்கனு பாக்க) நாமும் வந்து நிக்கிற இடம் தான் இந்த செல்லாயி கொவில் சல்லிக்கட்டோட வாடிவாசல்.
யாருங்க அப்பேற்பட்ட காரின்னு தான கேக்குறிங்க வேறயாருமில்ல காரி என்கிற காளையை அடக்கி தன் அப்பன் சாவுக்கு பழி தீர்க்க வாடிவாசலில் காரிக்காக காத்திருக்கிறான் பிச்சி.
காரிக்கு முன்னாடி பில்லைகாளை, கொரலை காளை என இரண்டு பெரும் பேர் பெற்ற வீரக்காளைகளை அடக்கி செல்லாயி கோயில் சல்லிக்கட்டை பார்க்க வந்தவார்களையும் வியப்பிலும் உற்சாகத்திலும் பெரியப்பட்டி சமீன்தாரை அதிர்ச்சியிலும் ஆழ்த்துகிறான் பிச்சி.
அப்பறம் என்னங்க அதேதான், காரியை அடக்கி தன் அப்பன் சாவுக்கு பழிவாங்குற அதற பழசான அதே கதை தான்.
“அதிகாரத்திலிருப்பவருக்கு பயன்படும் வரை தான் உன் வாழ்வு. உன்னால் எவ்வித பயனும் இல்லை எனில் அதிகாரத்தின் விஷ நாக்கு உன்னை தீண்ட தயங்காது” என்பதை காரியை பெரியப்பட்டி சமீன்தார் சுட்டு கொல்வதன் மூலம் நமக்கு உணர்த்துகிறது இந்நாவல் அற்புதமான படைப்பு.