7th தமிழ் இயல் 8.1 புதுமை-விளக்கு

1. "வைகயம் தகளியா வார்கடலே நெய்யாக" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்? பொய்கை ஆழ்வார்
2. "சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? பொய்கை ஆழ்வார்
3. வையகம் என்பதன் பொருள் என்ன? உலகம்
4. வெய்ய என்பதன் பொருள் என்ன? வெப்பக்கதிர் வீசும்
5. சுடர்ஆழியான் என்பதன் பொருள் என்ன? ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
6. இடர்ஆழி என்பதன் பொருள் என்ன? துன்பக்கடல்
7. சொல் மாலை என்பதன் பொருள் என்ன? பாமாலை
8. பூமியை அகல்விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகயும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனை சுடராகவும் கொண்டவன் யார்? திருமால்
9. பொய்கை ஆழ்வார் எங்கு பிறந்தார்? காஞ்சிபுரத்திற்கு அருகில் திருவெஃகா
10. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியை பாடியவர் யார்? பொய்கையாழ்வார்
11. "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? பூதத்தாழ்வார்
12. தகளி என்பதன் பொருள் என்ன? அகல்விளக்கு
13. ஞானம் என்பதன் பொருள் என்ன? அறிவு
14. நாரணன் என்பதன் பொருள் என்ன? திருமால்
15. பூதத்தாழ்வார் எங்கு பிறந்தார்? சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்
16. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியவர் யார்? பூதத்தாழ்வார்
17. ஒரு பாடலின் இறுதி எழுத்தோ அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை ----- என்பர்? அந்தாதி
18. அந்தம் என்றால் என்ன? முடிவு
19. ஆதி என்றால் என்ன? முதல்
20. அந்தாதி என்ன வகை இலக்கியம்? சிற்றிலக்கியம்
21. திருமலைப் போற்றிப் பாடியவர்கள் எத்தனை பேர்? 12 பேர்
22. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு எது? நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
23. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை தொகுத்தவர் யார்? நாதமுனி
24. முதலாழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்? மூன்று பேர் (பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்)
25. "இடம் ஆழி நீங்குகவே "இத்தொடரில் இடம் என்பதன் பொருள் என்ன? துன்பம்
26. 'ஞானச்சுடர் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? ஞானம் + சுடர்
27. இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதுக? இன்புறுகு
28. பொருத்துக:
அன்பு - நெய்
ஆர்வம் - தகளி
சிந்தை - விளக்கு
ஞானம் - இடுதிரி