7th தமிழ் இயல் 6.1 ஒரு-வேண்டுகோள்

1. "கலையுலகப் பிரும்மாக்களே மண்ணின் வனப்புக்குப் "எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? தேனரசன்
2. பிரும்மாக்கள் என்பதன் பொருள்? படைப்பாளர்கள்
3. நெடி என்பதன் பொருள்? நாற்றம்
4. மழலை என்பதன் பொருள்? குழந்தை
5. வனப்பு என்பதன் பொருள்? அழகு
6. மேனி என்பதன் பொருள்? உடல்
7. தேனரசன் என்ன பணியாற்றினார்? தமிழாசிரியர்
8. வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளவர் யார்? தேனரசன்
9. எந்த கவிஞர்களின் கவிதைகளின் சமுதாய சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்பட்டது? தேனரசன்
10. பூரிப்பு என்பதன் பொருள்? மகிழ்ச்சி
11. மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் போன்ற நூல்களை எழுதியவர் யார்? தேனரசன்
12. மயிலும் மானும் வனத்திற்கு ----- தருகின்றன? வனப்பு
13. மிளகாய் வற்றலின் ----- தும்மலை வரவழைக்கும்? நெடி
14. அன்னை தான் பெற்ற ----- சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்? மழலையின்
15. 'வனப்பில்லை 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? வனப்பு + இல்லை
16. 'வார்ப்பு + எனில் ' என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? வார்ப்பெனில்