பிரித்தெழுதுக Quiz -1

1. "கலனல்லால்" - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. (10-10-2023 TNPSC)

(A) கலம் + அல்லால்
(B) கலன் + லல்லால்
(C) கலன் + அல்லால்
(D) கலன் + னல்லால்

2. "வானமளந்தது" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? (09-12-2023 TNPSC)

(A) வான + மளந்தது
(B) வான் + அளந்தது
(C) வானம் + அளந்தது
(D) வான் + மளந்தது

3. சரியான விடையைத் தேர்க? (09-12-2023 TNPSC)

(A) கண் + அழகு = கண்ணழகு
(B) கண் + காட்சி = கண்ணாட்சி
(C) கண் + பார்வை = கற்பார்வை
(D) கண் + இமை = கண்ணமை

4. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்? (09-12-2023 TNPSC)

(A) வாசலிங்காரம்
(B) வாசலலங்காரம்
(C) வாசல் அலங்காரம்
(D) வாசலங்காரம்

5. "இரண்டல்ல" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? (09-12-2023 TNPSC)

(A) இரண்டு + டல்ல
(B) இரண் + அல்ல
(C) இரண்டு + இல்ல
(D) இரண்டு + அல்ல

6. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______ (09-12-2023 TNPSC)

(A) சிறப்புஉடையார்
(B) சிறப்புடையார்
(C) சிறப்படையார்
(D) சிறப்பிடையார்

7. என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? (09-12-2023 TNPSC)

(A) என்றுரைக்கும்
(B) என்றுஉரைக்கும்
(C) என்றிரைக்கும்
(D) என்றரைக்கும்

8. சேர்த்தெழுதுதல் - 'கட்டி + அடித்தல்' என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல் (05-12-2023 TNPSC)

(A) கட்டியிடத்தல்
(B) கட்டியடித்தல்
(C) கட்டிஅடித்தல்
(D) கட்டுஅடித்தல்

9. "தேர்ந்தெடுத்து" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது (05-12-2023 TNPSC)

(A) தேர் + எடுத்து
(B) தேர்ந்து + தெடுத்து
(C) தேர்ந்தது + அடுத்து
(D) தேர்ந்து + எடுத்து

10. சரியான விடையைத் தேர்க? (05-12-2023 TNPSC)

(A) கண் + உண்டு = கண்ணுண்டு
(B) கண் + உண்டு கண்ணூண்டு
(C) கண் + உண்டு = கல்லுண்டு
(D) கண் + உண்டு = காண்ணுண்டு