10th தமிழ் இயல் 3.4 கோபல்லபுரத்து-மக்கள்

1. கரிசல் இலக்கியம் எந்த பகுதிகளில் தோன்றியது? கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றியது
2. காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையை சார்ந்து வாழ்கின்ற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையை சொல்லும் இலக்கியம்? கரிசல் இலக்கியம்
3. கரிசல் மண்ணின் படைப்பாளி கு. அழகிரிசாமி யாருக்கு முன் எழுத தொடங்கியவர் யார்? கி. ராஜநாராயணன்
4. கரிசல் இலக்கியம் பற்றி எழுதத் தொடங்கியவர்? கு. அழகிரிசாமி
5. கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்தி கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர் யார்? கி. ராஜநாராயணன்
6. கரிசல் பரம்பரை இன்றளவும் நிலை நிறுத்திக்கொள்ளக் காரணமாக இருப்பவர்கள் யார்? பா. செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ. தர்மன், வேல ராமமூர்த்தி இன்னும் பலர்
7. கோபல்ல கிராமம் என்னும் புதினத்தை தொடர்ந்து எழுதப்பட்ட கதை? கோபல்லபுரத்து மக்கள்
8. கி. ராஜநாராயணன் அவர்களின் சொந்த ஊர் எது? இடைசெவல்
9. இந்திய விடுதலைப் போரின் பின்னியைக் கொண்டாநூல் எது? கோபல்லபுரத்து மக்கள்
10. கோபல்லபுரத்து மக்கள் என்ற நூலின் ஆசிரியர் யார்? கி. ராஜநாராயணன்
11. யாருடைய நூல் கதை சொல்லியின் கதை போக்கில் அமைந்திருக்கும்? கி. ராஜநாராயணன்
12. கோபல்லபுரத்து மக்கள் என்ற நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது எந்த ஆண்டு கிடைத்தது? 1991 ஆம் ஆண்டு
13. கி. ராஜநாராயணன் எத்தனைக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்? இருபதுக்கும் மேற்பட்ட
14. கரிசல் வட்டாரச் சொல்லகராதியை உருவாக்கியவர் யார்? கி. ராஜநாராயணன்
15. எழுத்துலகில் கி. ரா. என அழைக்கப்படுவர் யார்? கி. ராஜநாராயணன்
16. யார் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழி புனைகதைகள் கரிசல் இலக்கியம் என அழைக்கப்படுகின்றன? கி. ராஜநாராயணன்
17. "கறங்கு இசை விழவின் உறத்தை" என்ற அகநானுறு வரியில் எந்த ஊர் சிறப்பிக்கப்பட்டுள்ளது? உறையூர் திருச்சி மாவட்டம்