10th தமிழ் இயல் 3.1 விருந்து-போற்றுதும்

10th தமிழ் இயல் 3.1 விருந்து-போற்றுதும்
: :

1. விருந்தே புதுமை என்று கூறியவர்? தொல்காப்பியம்
2. விருந்தோம்பலை வலியுருத்த ஒரு அதிகாரத்தையே படைத்தவர் யார்?
 திருவள்ளுவர் (இல்லறவியல்)
3. முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை "மோப்பக் குழையும் அனிச்சம் "என்று எடுத்துரைத்தவர் யார்? திருவள்ளுவர்
4. "தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை "என்ற வரி இடம் பெற்ற நூல் எது? சிலப்பதிகாரம்
5. விருந்தோம்பல் பற்றி 17 - ம் நுற்றாண்டின் சுவர் எங்கு உள்ளது? சிதம்பரம்
6. கோவலனை பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததை விட விருந்தினரை போற்ற முடியாத நிலையை எண்ணியே வருந்துவதாக குறிப்பிடுவதன் மூலம் விருந்தினரை போற்றிப் பேணல் பழந்தமிழரின் மரபு என்பதை உணர்த்தியவர்? இளங்கோவடிகள்
7. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாக கூறியவர் யார்? கம்பர்
8. கலிங்கத்துப்பரணியில் யார் விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்குகியவர் யார்? ஜெயங்கொண்டார்
9. தனித்து உண்ணாமை என்பது தமிழரின் ----- பண்பின் அடிப்படை ஆடும்? விருந்தோம்பல்
10. உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே - என்ற புறநானுறு பாடலை பாடியவர் யார்? கடலுள் மாய்த்த இளம்பெருவழுதி
11. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்ப தலைவிக்கு உண்டு எனக் கூறும் நூல் எது? நற்றிணை
12. "அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் "என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது? நற்றிணை
13. "காலின் ஏழடி பின் சென்று" என்ற வரி இடம் பெற்ற நூல் எது? பொருநராற்றுப்படை
14. விருந்தினருக்கு தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை விருந்தாக படைத்த செய்தி எந்த நூலில் உள்ளது? புறநானுறு
15. குரல் உணங்கு விதைத்திணை உரல்வாய்ப் பெய்து - என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது? புறநானுறு
16. நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்காக பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன் என்ற செய்தி இடம்பெற்ற நூல்? புறநானுறு
17. "நெருநை வந்த விருந்தினற்கு மற்றுத்தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம் " - என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? புறநானுறு
18. விதைத்து விட்டு வந்த நெல்லை மீண்டும் அரித்து சிவனடியார்க்கு உணவளித்தவர் யார்? இளையான்குடி மரறநாயனார்
19. நெய்தல் நிலத்தல் பாணர்களை வரவேற்று "குழல் மீன் கறி" பிறவும் கொடுத்ததாக கூறும் நூல்? சிறுபாணாற்றுப்படை
20. இலையை மடிப்பதற்கு முந்தைய வினாடிக்கு முன்பாக மறுக்க மறுக்க பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில் நீண்டு கொண்டிருந்தது பிரியங்களின் நீள் சரடு" என்ற கவிதையை இயற்றியவர் யார்? அம்சப்பிரியா
21. உணவு உண்ண யாரேனும் உள்ளீர்களா என்று கேட்கும் வழக்கம் இருந்ததை கூறும் நூல் எது? குறுந்தொகை
22. "பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்? குறுந்தொகை
23. "மருந்தே ஆயினும் விருந்தோடு உண் " - என்ற வரியைக் கூறியவர் யார்? ஒளவையார்
24. "வரகரிசிக் சோறும் வழுதுணைங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும் திறமுடனே" என்று பாடியவர் யார்? ஒளவையார்
25. யாருடைய ஆட்சிக் காலத்தில் சத்திரங்கள் மிக அதிகமாகத் தோன்றின? நாயக்கர், மராட்டியர் காலத்தில்
26. தமிழர் பண்பாட்டில் எந்த இலைக்கு தனித்து இடம் உண்டு? வாழை இலை
27. எந்த தமிழ்ச்சங்கம் வாழையிலை விருந்து விழாவைக் கொண்டாடி வருகிறது? அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம்
28. இட்டதோர் தாமரைப் பூ இதழ் விரித் திருத்தல் போலே வட்டமாய் புறாக்கள் கூடி இறையுண்ணும்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? பாரதிதாசன்
29. "விருந்தினரைப் வழி அனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் வரை ஏழு அடி நடந்து சென்று வழி அனுப்பினர் "என்று கூறும் நூல் எது? பொருநராற்றுப்படை