8th தமிழ் இயல் 3.5 எச்சம்
1. படித்தான் என்னும் சொல்லில் பொருள் முற்றுப் பெறுகிறது. எனவே இது? வினைமுற்று
2. படித்த, படித்து ஆகிய சொற்களில் பொருள் முற்றுப்பெறவில்லை இவ்வாறு பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல்லின் பெயர் என்ன? எச்சம்
3. எச்சம் எத்தனை வகைப்படும்? இரண்டு வகை (பெயரெச்சம், வினையெச்சம்)
4. பெயரைக் கொண்டு முடியும் எச்சம் ----- ஆகும்? பெயரெச்சம்
5. பெயரெச்சம் ----- காலத்திலும் வரும்? மூன்று
6. பாடிய பாடல் - இறந்தகாலப் பெயரெச்சம் பாடுகின்ற பாடல் எக்காலப் பெயரெச்சம்? நிகழ்காலப் பெயரெச்சம்
7. பாடும் பாடல் எக்காலப் பெயரெச்சம்? எதிர்காலப் பெயரெச்சம்
8. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் ----- எனப்படும்? தெரிநிலைப் பெயரெச்சம்
9. செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் ----- எனப்படும்? குறிப்பு பெயரெச்சம்
10. வினையைக் கொண்டு முடியும் எச்சம் ----- எனப்படும்? வினையெச்சம்
11. செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியுமாறு காட்டும் வினையெச்சம் ----- எனப்படும்? தெரிநிலை வினையெச்சம்
12. காலத்தை வெளிப்படையாக காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் ----- எனப்படும்? குறிப்பு வினையெச்சம்
13. முற்றுப் பெறாமல் என்சி நிற்கும் சொல் ----- எனப்படும்? சொல்
14. கீழ்காணும் சொற்களில் பெயரெச்சம்? பார்த்த
15. குறிப்பு வினையெச்சம் ----- வெளிப்படையாகக் காட்டாது?. காலத்தை