7th தமிழ் இயல் 6.3 பேசும்-ஓவியங்கள்

1. ஆயக்கலைகள் மொத்தம் எத்தனை வகைப்படும்? 64
2. காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் எந்த கலைக்கு உண்டு? ஓவியக்கலை
3. பழங்கால மனிதர்கள் ஓவியங்கள் வரையத் தொடங்கிய இடம் எது? குகை
4. குகைகளில் காணப்படும் ஓவியங்கள் எந்த வகையாக இருக்கும்? கோட்டோவியங்கள்
5. குகைகளில் காணப்படும் ஓவியங்கள் யாவை? வேட்டைக்கு செல்லுதல், நடனம் ஆடுதல், போர் செய்தல்
6. குகைகளில் காணப்படும் ஓவியங்களுக்கு எதைக் கொண்டு வண்ணம் தீட்டினர்? மண் மற்றும் கல் துகள்களை கொண்டு
7. சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்கள்? அரண்மனைகள், மண்டபவங்கள், கோவில்கள், வீடுகள்
8. சித்தன்னவாசலில் காணப்படும் ஓவியங்கள் எந்த வகையாகும்? சுவர் ஓவியங்கள்
9. சுவர் ஓவியங்கள் எதைக் கொண்டு உருவாக்கினார்கள்? ஆற்று மணலுடன் சுண்ணாம்பு சேர்த்து சுவரை உருவாக்கி ஈரப்பதம் காய்வதற்கு முன் வரைந்தனர்
10. யார் நினைவாக தஞ்சை பெரிய கோவிலில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன? சுந்தரின் நினைவாக
11. ஓவியம் வரையும் துணியை எவ்வாறு அழைத்தனர்? எழினி, திரைச்சீலை, கிழி, படாம்
12. சீவகசிந்தாமணியில் காப்பியத்தில் யார் யானையைக் கண்டு அஞ்சியக் காட்சியை சீவகன் துணியில் வரைந்ததாக கூறப்படுகிறது? குணமாலை
13. துணி ஓவியங்கள் தற்போது என்ன பெயரில் அழைக்கப்படுகிறது? கலம்காரி ஓவியங்கள்
14. கலம்காரி ஓவியங்கள் தற்போது எம்மாநிலங்களில் வரையப்படுகிறது? தமிழகம், ஆந்திரா
15. "புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்? நெடுநல்வாடை
16. "புனையா ஓவியம் புறம் போந்தன்ன "என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்? மணிமேகலை
17. ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு ----- மற்றும் ----- ஓவியமாக வரைவார்கள்? கோட்டோவியமாகவும், வண்ணப்பூச்சி ஓவியமாகவும்
18. தற்போது எந்த வகை ஓவியங்கள் காண்பது அரிதாகிவிட்டது? ஓலைச்சுவடி ஓவியங்கள்
19. ஓலைச்சுவடி ஓவியங்கள் காணப்படும் காட்சிகள் யாவை? இதிகாசம் மற்றும் புராணக்கதை காட்சிகள்
20. ஓலைச்சுவடி ஓவியங்கள் எங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன? தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்
21. முற்காலத்தில் மன்னர்களின் ஆணைகளையும், அரசு ஆவணங்களையும் எதில் பொறிப்பது வழக்கம்? செப்பேடு
22. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கி கூறினர் என்ற செய்த இடம்பெற்றுள்ள நூல்? பரிபாடல்
23. "இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? பரிபாடல்
24. தந்த ஓவியங்கள் எங்கு அதிகமாக காணப்படுகிறது? கேரளா
25. கண்ணாடி ஓவியக் கலைஞர்கள் எங்கு அதிகமாக காணப்படுகின்றனர்? தஞ்சாவூர்
26. தற்காலத்தில் பரவலாக பயன்பாட்டில் இருக்கும் ஓவியம் எது? தாள் ஓவியங்கள்
27. அரசியல் கருத்துகளை எளிமையாக விளங்குவதற்கு பயன்படும் ஓவியம் எது? கருத்துப்பட ஓவியம்
28. எந்த இதழில் பாரதியார் கருத்துப்பட ஓவியங்களை வரைந்தார்? இந்தியா இதழில்
29. கருத்துப்பட ஓவியங்களின் மறுவடிவம் என்ன? கேலிச்சித்திரம்
30. ஓவியத்தின் வேறுபெயர் என்ன? ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி
31. ஓவியம் வரைபவர்களின் வேறுபெயர் என்ன? கண்ணுள் வினைஞர், ஓவியப் புலவர், ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர்
32. ஓவியக் கூடத்தின் வேறுபெயர்கள் என்ன? எழுதெழில் அம்பலம், எழுத்துநிலை மண்டபம், சித்திர அம்பலம், சித்திரக்கூடம், சித்திரமாடம், சித்திரமண்டபம், சித்திர சபை
33. ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் யார்? இராஜா இரவிவர்மா
34. நாட்காட்டி ஓவியம் வரையும் முறையில் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுபவர் யார்? கொண்டையராஜி
35. நாட்காட்டி ஓவியங்களை ----- என்றும் அழைப்பர்? பசார் பெயிண்டிங்
36. குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று? மண்துகள்
37. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம்? கேலிச்சித்திரம்
38. 'கோட்டோவியம் 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? கோடு + ஓவியம்
39. 'செப்பேடு 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? செப்பு + ஏடு
40. எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? எழுத்தாணி
41. கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் யார்? பாரதியார்
42. கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது? துணி ஓவியம்
43. மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் ----- மீது பொறித்துப் பாதுகாத்தனர்? செப்பேடுகள்