குறில், நெடில் வேறுபாடு

அலகு I இலக்கணம்

1) குறில்‌ நெடில் மாற்றத்தில்‌ தவறான இணையைக்‌ கண்டறிக.

a) இரை, ஈகை
b)
சிறகு, வளர்த்தல்‌
c)
உடல்‌, ஊண்‌
d)
படம்‌, பார்த்தல்‌

 Answer

b) சிறகு, வளர்த்தல்‌

2) குறில்‌ நெடில்‌ மாற்றம்‌ அறிந்து, பொருள்‌ வேறுபாடு சரியானதைக்‌ கண்டறிக
கனகம்‌ – கானகம்‌

a) செல்வம்‌ – அரசன்‌
b)
காடு – தொடுதல்‌
c)
பொன்‌ – காடு
d)
நங்கை – தங்கை

 Answer

c) பொன்‌ – காடு

3) குறில், நெடில்‌ வேறுபாடுணாந்து பொருளறிக
அறு-ஆறு

a) நதி – ஓர்‌ எண்‌
b)
வெட்டுதல்‌ – நதி
c)
வெட்டுதல்‌ – அறுத்தல்‌
d)
அறுத்தல்‌ – கட்டுதல்‌

 Answer

b) வெட்டுதல்‌ – நதி

4) கோடிட்ட இடங்களுக்கு பொருந்திய சொற்களைத்‌ தேர்க
————
வில்‌ ———— குளித்தது.

a) விடு,வீடு
b)
சுடு, சூடு
c)
மடு, மாடு
d)
அடு, ஆடு

 Answer

c) மடு, மாடு

5) பொருந்தா இணையைக்‌ கண்டறிக.

a) மடு – மாடு
b)
தடு – தாடு
c)
விடு – வீடு
d)
எடு – ஏடு

 Answer

b) தடு – தாடு

6) குறில் நெடில்‌ மாற்றத்தில்‌ தவறான இனணையைக் கண்டறிக.

a) இன்பம்‌, ஈகை
b)
அகல்‌, ஆவல்‌
c)
உணவு, ஊதல்‌
d)
எறும்பு, ஐவர்‌

 Answer

d) எறும்பு, ஐவர்‌

7) குறில்‌ நெடில்‌ அடிப்படையில்‌ பொருள்‌ வேறுபாடு காண்க.
விடு – வீடு

a) தங்குமிடம்‌ – விட்டுவிடுதல்‌
b)
விட்டுவிடுதல்‌ – தங்குமிடம்‌
c)
விட்டுவிடுதல்‌ – தவிர்த்துவிடுதல்‌
d)
தங்குமிடம்‌ – தாங்குமிடம்‌

 Answer

b) விட்டுவிடுதல்‌ – தங்குமிடம்‌

8) குறில்‌ நெடில்‌ வேறுபாடு அறிந்து சரியான இணையைத்‌ தேர்க.
சிலை – சீலை

a) சிற்பம்‌ – புடவை
b)
புடவை – சிற்பம்‌
c)
கற்சிலை – ஓவியம்‌
d)
சிற்பம்‌ – ஒழுக்கம்‌

 Answer

a) சிற்பம்‌ – புடவை

9) தழை – தாழை – பொருள்‌ சரியாகப்‌ பொருந்திய இணையைத்‌ தேர்க

a) செழிக்கச் செய்‌ – வாடச்செய்‌
b)
மலர்‌ – மடல்‌
c)
மலர்‌ – இலை
d)
இலை – மலர்‌ வகை

 Answer

d) இலை – மலர்‌ வகை

10) குறில்‌ நெடில்‌ மாற்றம்‌ அறிந்து பொருள்‌ வேறுபாடு சரியானதைக்‌ கண்டறிக.
சிலை – சீலை

a) ஓவியம்‌ – வண்ணம்‌
b)
இறைவன்‌ திருவுருவம்‌ – துணி
c)
மணல்‌ – குன்று
d)
மறை – வேதம்‌

 Answer

b) இறைவன்‌ திருவுருவம்‌ – துணி

11) குறில்‌ நெடில்‌ மாற்றம்‌
சரியான பொருள்‌ வேறுபாடறிந்து தெரிவு செய்க. [சிலை – சீலை]

a) சிற்பி – துணி
b)
சிற்பம்‌ – துணி
c)
வில்‌ – அம்பு
d)
அம்பு – வில்‌

 Answer

b) சிற்பம்‌ – துணி

12) குறில்‌ நெடில்‌ பொருள்‌ வேறுபாடறிந்து சரியான விடையைத்‌ தெரிவு செய்க.
பாரி – பரி

a) தலைவன்‌ – கழுதை
b)
வீரன்‌ – பரித்துக்கொள்
c)
வள்ளல்‌ – குதிரை
d)
மாரி – குதிரை

 Answer

c) வள்ளல்‌ – குதிரை

13) குறில்‌ நெடில்‌ மாற்றம்‌ அறிந்து பொருள்‌ வேறுபாடு சரியானதைக்‌ கண்டறிக
அழி – ஆழி

a) அழித்தல்‌ – வீரம்‌
b)
வயல்‌ – கடல்‌
c)
நெருப்பு- பறவை
d)
அழித்தல்‌ – கடல்‌

 Answer

d) அழித்தல்‌ – கடல்‌

14) குறில்‌ நெடில் மாற்றம்‌ அறிந்து
தவறான இணையைக்‌ கண்டறிக

a) கலம்‌ காலம்‌
b)
சுழல் சூழல்‌
c)
புகழ் திகழ்‌
d)
வளம்‌ வாழ்வு

 Answer

c) புகழ் திகழ்‌

15) குறில்‌ நெடில்‌ மாற்றம்‌ அறிந்து, பொருள்‌ வேறுபாடு சரியானதைக்‌ கண்டறிக (வனம்‌ – வானம்‌)

a) விசும்பு – அரண்‌
b)
கான்‌ – விசும்பு
c)
முளி – ஆரம்பம்‌
d)
சோலை – பொழில்‌

 Answer

b) கான்‌ – விசும்பு

16) குறில்‌ நெடில்‌ மாற்றம்‌ அறிந்து பொருள்‌ வேறுபாடு சரியானதைக்‌ கண்டறிக (மலை – மாலை)

a) மழை – வெள்ளம்‌
b)
தொடுதல்‌ – விடுதல்‌
c)
சிகரம்‌ – சிறு பொழுது
d)
விலங்கு – ஓவியம்‌

 Answer

c) சிகரம்‌ – சிறு பொழுது

17) குறில்‌ நெடில்‌ மாற்றம்‌ – பொருள்‌ வேறுபாடு அறிக.
கொடு – கோடு”

a) செய்தல்‌ – வட்டம்‌
b)
தருதல்‌ – நேராக வரைதல்‌
c)
விருப்பம்‌ – வளைவு
d)
உயரம்‌ – குழந்தை

 Answer

b) தருதல்‌ – நேராக வரைதல்‌

18) குறில்‌ – நெடில்‌ மாற்றம்‌ பொருள்‌ வேறுபாடு அறிக.
விதி – வீதி

a) அகலம்‌ – வீடு
b)
வரி விதித்தல்‌ – தரு
c)
தடைவித்த்தல்‌ – தலைவலி
d)
வீடு பேறு – தலையெழுத்து

 Answer

b) வரி விதித்தல்‌ – தரு

19) அடைப்புக்‌ குறிக்குள்‌ உள்ள சொற்கள்‌ பொருந்தக்‌ கூடிய தொடரைக்‌ கண்டறிக. (பட்டு – பாட்டு)

a) கவலைப்பட்ட வாழ்விற்குப்‌ பாட்டு அவசியம்‌
b)
தூண்டிலில்‌ பட்ட மீனைப்‌ பாட்டுப்‌ பாடி இழுத்தான்‌
c)
பட்டு மெத்தையில்‌ பாட்டுக்‌ கேட்டபடி தூங்கினாள்‌
d)
துன்பப்பட்டு வாழும்‌ வாழ்வில்‌ பாட்டுக்கு என்ன வேலை?

 Answer

c) பட்டு மெத்தையில்‌ பாட்டுக்‌ கேட்டபடி தூங்கினாள்‌

20) குறில்‌ – நெடில்‌ மாற்றம்‌, பொருள்‌ வேறுபாடு தருக.
சிறு – சீறு

a) வறுமை – புலி
b)
கருமை – வலிமை
c)
சிறுமை – பாய்தல்‌
d)
கருவி – சிறியது

 Answer

c) சிறுமை – பாய்தல்‌

21) குறில்‌ நெடில்‌ மாற்றம்‌ அறிந்து, பொருள்‌ வேறுபாடு சரியானதைக்‌ கண்டறிக.
தொடு – தோடு

a) இயற்கை – செயற்கை
b)
வெகுளி – கோபம்‌
c)
கேண்மை – நட்பு
d)
தொடுதல்‌ – அணிகலன்‌

 Answer

d) தொடுதல்‌ – அணிகலன்‌

22) சிறு – சீறு என்ற சொற்களின்‌ பொருள்‌ தரும்‌ தொடரைத்‌ தேர்ந்தெடுக்க.

a) சிறிய வீடு கட்டிச்‌ சிறப்பாக வாழ்ந்தான்‌.
b)
ஆற்றங்கரையோரம்‌ கோபத்துடன்‌ அமர்ந்திருந்தான்‌
c)
சின்னச்‌ சின்ன ஆசைகள்‌ நிறைவேற உழைக்க வேண்டும்‌
d)
சிறு குட்டியாக இருந்தாலும்‌ சீறுவதில்‌ புலியை மிஞ்ச முடியாது

 Answer

d) சிறு குட்டியாக இருந்தாலும்‌ சீறுவதில்‌ புலியை மிஞ்ச முடியாது

23) குறில்‌ நெடில் மாற்றம்‌ பொருள்‌ வேறுபாடறிந்து சரியானதைத்‌ தெரிக. (மடு – மாடு)

a) செல்வம்‌ – பக்கம்‌
b)
நீர்நிலை – எருது
c)
கிராமம்‌ – செல்வம்‌
d)
மடித்துவை – பசு

 Answer

b) நீர்நிலை – எருது

24) குறில்‌ நெடில்‌ மாற்றம்‌, பொருள்‌ வேறுபாடறிந்து சரியான இணையைத்‌ தெரிக. (கொள்‌ – கோள்)

a) புறங்‌ கூறல்‌ – வாங்கு
b)
புறங்‌ கூறல்‌ – கிரகம்‌
c)
கொல்லுதல்‌ – கிரகம்‌
d)
வாங்கு – புறங்கூறல்‌

 Answer

d) வாங்கு – புறங்கூறல்‌

25) குறில்‌ நெடில்‌ பிழையான சொல்‌ எது?

a) கல்‌ – கால்‌
b)
கிரி – கீரி
c)
குடம்‌ – கூடம்‌
d)
கெண்டை – கொண்டை

 Answer

d) கெண்டை – கொண்டை