8th தமிழ் இயல் 4.1 கல்வி-அழகே-அழகு

1. மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தரக்கூடிய உண்மையான அணிகலன் எது என கூறும் நூல்? நீதிநெறி விளக்கம்
2. "கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? குமரகுருபரர்
3. மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தருவது எது? கல்வி
4. கலன் என்பதன் பொருள் என்ன? அணிகலன்
5. முற்ற என்பதன் பொருள் என்ன? ஒளிர
6. எவருக்கு அழகு தரும் அணிகலன் தேவையில்லை? கல்வி கற்றவர்க்கு
7. குமரகுருபரர் எந்த நூற்ராண்டைச் சேர்ந்தவர்? 17 - ம் நூற்றாண்டு
8. கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பிள்ளைத்தமிழ், முத்துத்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களை எழுதியவர் யார்? குமரகுருபரர்
9. நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் யார்? குமரகுருபரர்
10. நீதிநெறி விளக்கத்தில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன? கடவுள் வாழ்த்து உள்பட 102வெண்பாக்கள்
11. கற்றவருக்கு அழகு தருவது எது? கல்வி
12. "களனல்லால்"என்னும் சொல்லைப் பிரித்து எழுதாக் கிடைப்பது? கலன் + அல்லால்