8th தமிழ் இயல் 2.2 கோணக்காத்துப்-பாட்டு

8th தமிழ் இயல் 2.2 கோணக்காத்துப்-பாட்டு
: :


1. நாட்டில் பெரும் பஞசம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் எந்த பாடலாக பாடினர்? கும்மிப் பாடல்கள்
2. கும்மிப் பாடல்கள் பேச்சித்தமிழில் அமைந்த இவை ----- என்று அழைக்கப்பட்டன? பஞசக்கும்மிகள்
3. பஞசக்கும்மிகள் என்ற நூலைத் தொகுத்தவர் யார்? புலவர் செ. ராசு
4. காத்து நொண்டிச் சிந்து என்ற நூலை இயற்றியவர் யார்? வெங்கம்பூர் சாமிநாதன்
5. கோணக் காத்துப் பாட்டு என்ற கவிதை எந்த நூலிருந்து எடுக்கப்பட்டது? காத்து நொண்டி சிந்து
6. கோணக்காத்துப் பாடலில் புலவர் எந்தக் கடவுளை காக்குமாறு வேண்டுகிறார்? முருகன்
7. முகில் என்பதன் பொருள் என்ன? மேகம்
8. கெடிகலங்கி என்பதன் பொருள் என்ன? மிக வருந்தி
9. சம்பிரமுடன் என்பதன் பொருள் என்ன? முறையாக
10. சேகரம் என்பதன் பொருள் என்ன? கூட்டம்
11. வின்னம் என்பதன் பொருள் என்ன? தேசம்
12. வாகு என்பதன் பொருள் என்ன? சரியாக
13. காலன் என்பதன் பொருள் என்ன? எமன்
14. மெத்த என்பதன் பொருள் என்ன? மிகவும்
15. காங்கேய நாடு என்பதன் பொருள் என்ன? கொங்குமண்டலத்தில் 24நாடுகளுள் ஒன்று
16. வானில் கரு ----- தோன்றினால் மழை பொழியும் என்பர்? முகில்
17. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் ----- யும் ஒட்டிவிடும்? காலனை
18. 'விழுந்ததங்கே' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விழுந்தது + அங்கே
19. 'செத்திறந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? செத்து + இறந்த
20. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? பருத்தியெல்லாம்