7th தமிழ் இயல் 6.4 தமிழ்-ஒளிர்-இடங்கள்

1. இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் ஒன்று எது? தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
2. தஞ்சை சரசுவதி மகால் நூலகம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருவதாக கல்வெட்டு கூறுகிறது? கி. பி. 1122
3. தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் காணப்படுபவை? ஓலைச்சுவடி, ஓவியங்கள், கையெழுத்துப் படிகள்
4. தமிழ்ப் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது? தஞ்சாவூர்
5. தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு? 1981
6. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் எத்தனை ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டது? ஆயிரம் ஏக்கர்
7. வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது 'தமிழ்நாடு 'எனத் தெரியும் வகையில் கட்டப்பட்ட அமைப்பு உள்ள பல்கலைக்கழகம் எது? தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நோக்கம்?
8. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள புலன்களின் எண்ணிக்கை? 5 (கலைப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்ப்புலம், மொழிப்புலம், அறிவியல்புலம்)
9. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் எத்தனை துறைகள் உள்ளன? 25
10. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மற்றொரு சிறப்பு என்ன? சித்தமருத்துவத் துறை மூலம் பொது மக்களுக்கு மருத்துவவசதி
11. இந்திய ஆட்சிப்பணி பயிற்சியாளர்களுக்குத் தமிழ்மொழிப் பயிற்சியை எந்த பல்கலைக்கழகம் வழங்குகிறது? தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
12. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் எங்கு கல்வி கற்று வருகின்றனர்? தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
13. உ. வே. சா நூலகம் எங்கு உள்ளது? சென்னை
14. உ. வே. சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு? 1942
15. உ. வே. சா நூலகத்தில் எத்தனை ஓலைச்சுவடிகள் உள்ளன? 2128
16. உ. வே. சா நூலகத்தில் எத்தனை நூல்கள் உள்ளன? 2941
17. கீழ்த்திசை நூலகம் எங்கு உள்ளது? சென்னை
18. கீழ்த்திசை நூலகம் எப்போது தொடங்கப்பட்டது? 1869
19. கீழ்த்திசை நூலகம் தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எந்த தளத்தில் இயங்கி வருகிறது? 7 வது தளம்
20. கன்னிமாரா நூலகம் எங்கு உள்ளது? சென்னை
21. கன்னிமாரா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு? 1896
22. தமிழ்நாட்டில் மைய நூலகம் எது? கன்னிமாரா நூலகம்
23. கன்னிமாரா நூலகத்தில் எத்தனை இலட்சத்திற்கு மேற்பட்ட நூல்கள் உள்ளது? ஆறு இலட்சத்திற்கு மேல்
24. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி எந்த நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது? கன்னிமாரா நூலகம்
25. கன்னிமாரா நுலகத்தில் எந்த தளத்தில் மறைமலை அடிகள் நூலகம் செயல்பட்டு வருகின்றது? மூன்றாவது தளம்
26. திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யுள் வகையில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது? சென்னை
27. வள்ளுவர் கோட்டம் கட்டுமானப் பணிகள் கி. பி. 1973 ஆண்டு தொடங்கி எப்பொழுது முடிக்கப்பட்டது? 1976
28. வள்ளுவர் கோட்டம் எதன் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன? திருவாரூர் தேர் போன்ற வடிவம்
29. வள்ளுவர் கோட்டத்தின் அடிப்பகுதி எத்தனை அடி நீளம் மற்றும் அகலம் உடையது? 25அடி அகலம், 25அடி நீளம்
30. வள்ளுவர் கோட்ட தேரின் மொத்த உயரம் எத்தனை அடி? 128அடி
31. வள்ளுவர் கோட்ட தேரின் மையத்தில் எண் கோண வடிவில் யாருடைய சிலை அமைக்கப்பட்டு உள்ளது? திருவள்ளுவர் சிலை
32. வள்ளுவர் கோட்டத்தில் அறத்துப்பால் எந்த பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது? கருநிறப் பளிங்கு கல்லில்
33. வள்ளுவர் கோட்டத்தில் பொருட்பால் எந்த பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது? வெண்ணிறப் பளிங்கு கல்லில்
34. வள்ளுவர் கோட்டத்தில் இன்பத்துப்பால் எந்த பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது? செந்நிறப் பளிங்கு கல்லில்
35. திருக்குறளின் கருத்துகளை விளக்கும் ஓவியங்கள் எங்கு வரையப்பட்டுள்ளது? வள்ளுவர் கோட்டம்
36. திருவள்ளுவர் சிலை எங்கு உள்ளது? கன்னியாகுமரி
37. திருவள்ளுவர் சிலையின் உயரம்? 133அடி
38. விவேகானந்தர் பாறைக்கு அருகில், கடல் நடுவே நீர் மட்டத்திலிருந்து ----- அடி உயரப்பாறை மீது திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது? 30 அடி
39. திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணி எப்போது தொடங்கியது? 1990
40. திருவள்ளுவர் சிலை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட ஆண்டு? 2000 ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நாள்
41. அறத்துப்பாலில் அதிகாரங்களை உணர்த்துவது போல் திருவள்ளுவர் சிலையின் பீடம் எத்தனை அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது? 38
42. பொருட்பால், இன்பத்துப்பால் ஆகியவற்றில் மொத்த அதிகாரங்களை குறிக்கும் வகையில் திருவள்ளுவர் சிலை ----- அடி உயரம் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது? 95அடி
43. மண்டபத்தில் உட்சுவரில் அதிகாரத்திற்கு ஒரு குறள் வீதம் 133குறட்பாக்கள் எந்த மொழியில் செதுக்கப்பட்டது? தமிழ், ஆங்கிலம்
44. திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு 3டன் முதல் 8டன் வரை உள்ள எத்தனை கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது? 3681
45. திருவள்ளுவர் சிலை மொத்தம் ----- டன் எடை கொண்டது? 7000டன்
46. உலக தமிழ்ச் சங்கம் எங்கு உள்ளது? மதுரை
47. காந்தி அருங்காட்சியகம் அருகில் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் எந்த பகுதியில் நிறுவப்பட்டுள்ளது? தல்லாகுளம்
48. மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் எத்தனை சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது? 87000
49. மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்போது மதுரையில் உலகத்தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஆண்டு? 1981
50. உலகத்தமிழ் சங்கம் மதுரையில் எந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது? 2016
51. மதுரையில் உலக தமிழ்ச் சங்க வெளிச்சுவரில் என்ன உள்ளன? 1330குறட்பாக்கள் இடம் பெற்றுள்ளன
52. மதுரையில் உலக தமிழ்ச் சங்க நுழைவு வாயிலில் எந்தக் காட்சி உள்ளன? தருமிக்கு பாண்டிய மன்னன் பொற்கிழி வழங்கிய காட்சி புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது
53. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கிய இடம்? பூம்புகார்
54. பூம்புகார் பற்றிய செய்திகள் எந்த நூல்களில் காணப்படுகிறது? சிலப்பதிகாரம், பட்டினப்பாலை
55. பூம்புகாரில் மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும், பட்டினப்பாக்கம் என்னும் நகர்ப்பகுதியும் அமைந்திருந்ததாக கூறும் நூல் எது? சிலப்பதிகாரம்
56. பூம்புகார் கடற்கரையில் சிற்பக்கலை கூடம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 1973
57. பூம்புகார் கடற்கரையில் உள்ள சிற்பக்கலைக்கூடம் எத்தனை மாடங்களைக் கொண்டது? 7 மாடங்கள் | பூம்புகார் கடற்கரையில் உள்ள சிற்பக்கலைக் கூடத்தில் யாருடைய வரலாற்றை விளக்கும் 49 சிற்பத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளது?
58. பூம்புகார் சிற்பக்கலைக் கூடத்தில் யாருக்கு ஒரு நெடிய சிலை நிறுவப்பட்டுள்ளது? மாதவி