6th தமிழ்-இயல் 2.5 முதலெழுத்தும்-சார்பெழுத்தும்

6th தமிழ்-இயல் 2.5 முதலெழுத்தும்-சார்பெழுத்தும்
: :

1. தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? இரண்டு (முதல் எழுத்து, சார்பு எழுத்து)
2. உயிர் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை? 12
3. மெய்யெழுத்துக்கள் மொத்தம் எத்தனை? 18
4. முதல் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை? 30
5. பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமான எழுத்து எது? முதல் எழுத்து
6. முதல் எழுத்துக்களை சார்ந்து வரும் எழுத்துக்கள் எவை? சார்பெழுத்துக்கள்
7. சார்பெழுத்து எத்தனை வகைப்படும்? 10
8. சார்பெழுத்துக்கள்
1. உயிர்மெய் 2. ஆய்தம் 3. உயிரளபெடை 4. ஒற்றளபெடை 5. குற்றியலிகரம் 6. குற்றியலுகரம் 7. ஐகாரக்குறுக்கம் 8. ஒளகாரக்குறுக்கம் 9. மகரக்குறுக்கம் 10. ஆய்தக்குறுக்கம்
9. மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் தோன்றும் எழுத்து எது? உயிர்மெய் எழுத்துகள்
10. உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் எவ்வாறு இருக்கும்? மெய்யும் உயிரும் சேர்ந்ததாக
11. வரிவடிவம் எதை ஒத்திருக்கும்? மெய்யெழுத்தை
12. ஒலிக்கும் கால அளவு எதை ஒத்திருக்கும்? உயிர் எழுத்தை
13. மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்ற எழுத்து எது? ஆய்தம்
14. ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் என்ன? முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, அஃகேனம்
15. நுட்பமான ஒலிப்பு முறையை உடைய எழுத்து எது? ஆய்தம்
16. தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்து எது? ஆய்தம்
17. தனித்து இயங்காத எழுத்து எது? ஆய்தம்
18. முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது? சார்பெழுத்து