10th தமிழ் இயல் 3.6 திருக்குறள்

1. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலோடு நின்றான் இரவு - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? உவமை அணி
2. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?எடுத்துக்காட்டு உவமையணி
3. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? உவமையணி
4. திருக்குறள் பற்றிய அறிவுமதியின் கவிதை என்ன? உரை (றை) ஊற்றிப் பார்த்தாலும் புளிக்காத பால் தந்தை தந்த தாய்ப்பால் முப்பால்