6th தமிழ்-இயல் 6.1 நானிலம்-படைத்தவன்

6th தமிழ் இயல் 6: கூடித்-தொழில்-செய்
6.1 நானிலம்-படைத்தவன்
1. "கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை" என்ற பாடலின் ஆசிரியர் யார்? முடியரசன்
2. மல்லெடுத்த என்ற சொல்லின் பொருள் என்ன? வலிமைபெற்ற
3. மறம் என்ற சொல்லின் பொருள் என்ன? வீரம்
4. சமர் என்ற சொல்லின் பொருள் என்ன? போர்
5. எக்களிப்பு என்ற சொல்லின் பொருள் என்ன? பெருமகிழ்ச்சி
6. நல்கும் என்ற சொல்லின் பொருள் என்ன? தரும்
7. கலம் என்ற சொல்லின் பொருள் என்ன? கப்பல்
8. கழனி என்ற சொல்லின் பொருள் என்ன? வயல்
9. ஆழி என்ற சொல்லின் பொருள் என்ன? கடல்
10. முடியரசனின் இயற்பெயர் என்ன? துரைராசு
11. பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியவர் யார்? முடியரசன்
12. "திராவிட நாட்டின் வானம்பாடி" என்று பாராட்டப்பெற்றவர் யார்? முடியரசன்
13. "வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் – அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்" என்ற பாடலின் ஆசிரியர் யார்? பாரதியார்
14. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் ----- ? வீரம்
15. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? கல் + எடுத்து
16. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? நான்கு + நிலம்
17. நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதுக? நாடென்ற
18. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதுக? கலமேறி