10th தமிழ் இயல் 1.4 உரைநடையின்-அணிநலன்கள்

எழில் முதல்வன், அறிஞர் அண்ணா, ப. ஜீவானந்தம், மா. இராமலிங்கம், மகாகவி பாரதியார், மு. வரதராசனார், ரா. பி. சேதுபிள்ளை, திரு. வி. கல்யாணசுந்தரனார்

10th தமிழ் இயல் 1.4 உரைநடையின்-அணிநலன்கள்
: :

1. குறிஞ்சிப்பாட்டை இயற்றியவர் யார்? கபிலர்
2. குறிஞ்சி மலர் என்ற நூலின் ஆசிரியர் யார்? நா. பார்த்தசாரதி
3. "உவமையும் பொருளும் வேற்றுமை ஒளிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்" என்று எழுதியவர் யார்? தண்டி
4. திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ் கணினி எந்த ஆண்டு வெளியிடப்பட்டது? 1983 செப்டம்பர்
5. திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ் கணினி எந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்டது? டி. சி. எம் டேட்டா புரொடக்டஸ்
6. தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்துக்கும் தலைமை செயலகத்துக்கு கோப்புகளையும், செய்திகளையும் பரிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினி எது? திருவள்ளுவர் கணினி
7. "திருப்பரங்குன்றத்தின் அழகை பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளை போல் வலப்புறமும் தென்புறமும் நீர் நிறைத்த காண்மாய்கள்" என்ற உவமை காணப்படும் நூல்? குறிஞ்சி மலர்
8. "களம்புகத் துடித்த நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய், உன் புன்னகைத்தான் அதற்கு சான்று" என்று கூறியவர்? அறிஞர் அண்ணா
9. "புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்" இக்குறளில் பயின்று வரும் அணி? எடுத்துக்காட்டு உவமை அணி
10. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன் படுத்துவதை எவ்வாறு அழைப்பர்? இணை ஒப்பு
11. புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை என்று எழுதியவர் யார்? வ. ராமசாமி
12. மழையும் புயலும் என்ற நூலின் ஆசிரியர் யார்? வ. ராமசாமி
13. இலக்கண என்றால் என்ன? அஃறிணைப் பொருள்களையும் உயர்திணையாக கருதி உயிர், உணர்வு உடையது போல எழுதுவது
14. தமிழ் தென்றல் யார்? திரு. வி. கல்யாணசுந்தரனார்
15. "தென்றல் அசைந்துவரும் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம்பதியாகும்" என்று எழுதியவர் யார்? ரா. பி. சேதுபிள்ளை
16. சொல்லின் செல்வர் யார்? ரா. பி. சேதுபிள்ளை
17. தமிழின்பம் என்ற நூலின் ஆசிரியர் யார்? ரா. பி. சேதுபிள்ளை
18. சொற்களை அளவாகப் பயன்படுத்தி உரைநடையை அழகு செய்தவர் யார்? மு. வரதராசனார்
19. நாட்டுப்பற்று என்ற கட்டுரை தொகுப்பை எழுதியவர் யார்? மு. வரதராசனார்
20. வாழ்க்கை நடத்துவதற்கு பொருட்கள் பல வேண்டும் என்று எழுதியவர் யார்? மு. வரதராசனார்
21. சோலையில் புகுவேன், மரங்கள் கூப்பிடும், விருந்து வைக்கும் என்ற வரிக்கு சொந்தக்காரர் யார்? திரு. வி. கல்யாணசுந்தரனார்
22. முரண்படு மெய்ம்மை என்பதன் ஆங்கில சொல்? paradox
23. "இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றுக்கு தவிர வேறு எதற்கு நாம் பயப்பட வேண்டும்" இது எதற்க்கான எடுத்துக்காட்டு? முரண்படு மெய்ம்மை
24. கலப்பில்லாத பொய் இதை எவ்வாறு கூறுவார்? சொல்முரண்
25. சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துக்களை கூறுவதற்கு என்ன பெயர்? எதிரிணை இசைவு
26. "குடிசைகள் ஒரு பக்கம், கோபுரங்கள் மறுபக்கம்" என்று கூறியவர்? ப. ஜீவானந்தம்
27. பெரியார் பேசாத நாள் உண்டோ? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டோ? என்று பெரியாரை பற்றி சிறப்பித்து கூறியவர் யார்? அறிஞர் அண்ணா
28. "இந்தியா தான் என்னுடைய மோட்சம்: இந்தியாவின் நன்மை தான் என் நன்மை" என்று கூறியவர் யார்? மகாகவி பாரதியார்
29. புதிய உரைநடையின் என்ற நூலின் ஆசிரியர் யார்? எழில் முதல்வன்
30. எழில் முதல்வனின் இயற்பெயர் என்ன? மா. இராமலிங்கம்
31. எழில் முதல்வனின் எந்த நூலுக்காக சாகித்திய அகாடமி விருது கிடைத்தது? புதிய உரைநடை என்ற நூலுக்காக
32. மாநிலக் கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியர் பணியைத் தொடங்கியவர் யார்? எழில் முதல்வன்
33. எழில் முதல்வனின் நூல்கள் யாவை? இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும், யாதுமாகி நின்றாய்
34. குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறை தலைவராக பணிசெய்தவர்? எழில் முதல்வன்
35. "வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கிய" என்று எந்த ஊரின் சிறப்பைக் கூறுகிறது? திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை (சிலப்பதிகாரம்)