8th தமிழ் இயல் 9.5 அணி-இலக்கணம்

1. உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணர வைக்கும் அணி எது? பிறிதுமொழிதல் அணி
2. பிறிதுமொழிதல் அணி எடுத்துக்காட்டு தருக? "கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து"
3. இரண்டும் பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்தி காட்டுவது? வேற்றுமை அணி
4. வேற்றுமை அணி எடுத்துக்காட்டு தருக? "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு"இக்குறளில் பயின்று வந்துள்ள அணி என்ன? வேற்றுமை அணி
5. ஒரு சொல் அல்லது தொடர் இருபொருளை தருமாறு அமைவது எது? இரட்டுறமொழிதல்
6. சிலேடை என்ற பெயரால் அழைக்கப்படும் அணி எது? இரட்டுறமொழிதல்
7. பிறிதுமொழிதல் அணியில் ----- மட்டும் இடம்பெறும்? உவமை
8. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது ----- அணி? வேற்றுமை
9. ஒரே செய்யுளை இருபொருள்படும் பாடுவது ----- அணி? இரட்டுறமொழிதல்
10. இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் என்ன? சிலேடை
11. objective ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக? குறிக்கோள்
12. confidence ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக? நம்பிக்கை
13. doctorate ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக? முனைவர் பட்டம்
14. round table conference ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக? வட்ட மேஜை மாநாடு
15. double voting ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக? இரட்டை வாக்குரிமை
16. university ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக? பல்கலைக்கழகம்