6th தமிழ்-இயல் 2.3 சிறகின்-ஓசை

6th தமிழ்-இயல் 2.3 சிறகின்-ஓசை
: :

1. பறவைகள் இடம் பெயர்தலை எவ்வாறு அழைப்பர்? வலசை போதல்
2. பெரும்பாலும் எந்த வகை பறவைகள் வலசை போகின்றன? நீர்வாழ் பறவைகள்
3. பறவைகள் எவற்றிற்காக இடம் பெயர்கின்றன? உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம்
4. பறவைகள் எவற்றை அடிப்படையாக கொண்டு இடம் பெயர்கின்றன? நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம்
5. பறவைகள் பொதுவாக எத்திசையில் வலசை செல்கின்றன?வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும்
6. சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை எது? கப்பல் பறவை
7. கப்பல் பறவை தரை இறங்காமால் எத்தனை கிலோமீட்டர் வரை பறக்கும்? 400 கிலோமீட்டர்
8. கப்பல் பறவைக்கு வழங்கும் வேறு பெயர்கள் என்ன? கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை
9. "நாராய், நாராய், செங்கால் நாராய்" என்னும் பாடலை எழுதியவர் யார்? சத்திமுத்தப்புலவர்
10. "தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்னும் பாடலை எழுதியவர் யார்? சத்திமுத்தப்புலவர்
11. சத்திமுத்தப்புலவர் எத்தனை ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்? ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்
12. “தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” என்னும் அடிகள் எந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன? பறவைகள் வலசை வந்த செய்தி
13. ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்குச் எந்த பறவைகள் வருவது தற்போதைய ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது? செங்கால் நாரைகள்
14. தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம் எது? சிட்டுக்குருவி
15. ஆண் சிட்டுக்குருவியின் தொண்டைப்பகுதி எந்த நிறத்தில் இருக்கும்?கருப்பு நிறத்தில்
16. ஆண் சிட்டுக்குருவியின் உடல்ப்பகுதி எந்த நிறத்தில் இருக்கும்?அடர்பழுப்பு நிறம்
17. பெண் சிட்டுக்குருவியின் உடல்ப்பகுதி எந்த நிறத்தில் இருக்கும்?மங்கிய பழுப்பு நிறம்
18. சிட்டுக்குருவி எப்படி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது? கூடுகட்டி
19. கூடுகட்டிய பின் சிட்டுக்குருவி எத்தனை முட்டைகள் வரை இடும்? மூன்று முதல் ஆறு முட்டைகள்
20. சிட்டுக்குருவி எத்தனை நாட்கள் அடைகாக்கும்? 14 நாட்கள்
21. இமயமலைத் தொடரில் எத்தனை மீட்டர் உயரத்தில் கூட பறவைகள் வாழ்கின்றன? 4000 மீட்டர்
22. சிட்டுக்குருவியின் வாழ்நாள் எத்தனை வருடங்கள் ஆகும்? பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள்
23. இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்? டாக்டர் சலீம் அலி
24. இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி யார்? டாக்டர் சலீம் அலி
25. தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் "சிட்டுக்குருவியின் வீழ்ச்சி" என்று பெயரிட்டவர் யார்? டாக்டர் சலீம் அலி
26. "காக்கை குருவி எங்கள் சாதி" என்று கூறியவர் யார்? பாரதியார்
27. உலகிலேயே நெடுந்தொலைவு அதாவது 22000 கி. மீ பயணம் செய்யும் பறவை எது? ஆர்டிக் ஆலா
28. பறவை பற்றிய படிப்பு? ஆர்னித்தலாஜி
29. உலக சிட்டுக்குருவிகள் நாள்? மார்ச் 20
30. தட்பவெப்பம் பிரித்து எழுதுக? தட்பம் + வெப்பம்
31. வேதியுரங்கள் பிரித்து எழுதுக? வேதி + உரங்கள்
32. தரை + இறங்கும் சேர்த்து எழுதுக? தரையிறங்கும்
33. வழி + தடம் சேர்த்து எழுதுக? வழித்தடம்
34. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி எது? துருவப்பகுதி
35. பறவைகளின் வலசை போகக் காரணங்களுள் ஒன்று? தட்பவெப்பநிலை
36. மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை எது? ஆர்டிக் ஆலா