10th தமிழ் இயல் 3.3 மலைபடுகடாம்

10th தமிழ் இயல் 3.3 மலைபடுகடாம்
: :

1. ஊர் ஊராகச் சென்று தம் கலைத்திறனால் மக்களை மகிழ்வித்தவர்கள் யாவர்? பாணர், கூத்தர், விறலியர்
2. "அன்று அவண் அசைஇ அல்சேர்ந்து அல்கி கன்று ஏரி ஒள்இணர் கட்டும்பொழுது மலைந்து "என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்? மலைபடுகடாம்
3. சிவந்த பூக்களை கொண்ட மரம் எது? அசோகமரம்
4. அசைஇ என்பதன் பொருள் என்ன? இளைப்பாறி
5. கடும்பு என்பதன் பொருள் என்ன? சுற்றம்
6. ஆரி என்பதன் பொருள் என்ன? அருமை
7. அல்கி என்பதன் பொருள் என்ன? தங்கி
8. வயிரியம் என்பதன் பொருள் என்ன? கூத்தர்
9. படுகர் என்பதன் பொருள் என்ன? பள்ளம்
10. வேவை என்பதன் பொருள் என்ன? வெந்தது
11. இறடி என்பதன் பொருள் என்ன? திணை
12. நரலும் என்பதன் பொருள் என்ன? ஒலிக்கும்
13. பொம்மல் என்பதன் பொருள் என்ன? சோறு
14. அசைஇ, கெழிஇ என்பதன் இலக்கணக்குறிப்பு? சொல்லிசை அளபெடை
15. பரூஉக், குரூஉக்கன் என்பதன் இலக்கணக்குறிப்பு? சொல்லிசை அளபெடை
16. மலைபடுகடாம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? கூத்தாற்றுப்படை
17. மலைப்படுகடாமில் எந்த விலங்கை உருவம் செய்யப்பட்டுள்ளது? மலையை யானைக்காக உருவகம்
18. மலையை யானையாக உருவகம் செய்து மழையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் ----- எனப் பெயர் பெற்றது? மலைபடுகடாம்
19. மலைபடுகடாம் என்ற நூலை இயற்றியவர் யார்? பெருங்கெளசிகனார்
20. மலைப்படுகடாம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்? நன்னன் என்னும் குறுநில மன்னன்
21. மலைபடுகடாம் நூலில் உள்ள மொத்த வரிகள் யாவை? 583
22. கறுப்பு நிறக் கரிசல் மண்ணின் இயற்கை தங்கம் எது? கம்பு