7th தமிழ் இயல் 1.2 ஒன்றல்ல-இரண்டல்ல

7th தமிழ் இயல் 1.2 ஒன்றல்ல-இரண்டல்ல
: :

1. "ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல "என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? உடுமலை நாராயணகவி
2. "சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி - இந்த வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு "என்ற பாடலின் ஆசிரியர்? உடுமலை நாராயணகவி
3. ஒப்புமை என்பதன் பொருள்? இணை
4. அற்புதம் என்பதன் பொருள்? விந்தை
5. முகில் என்பதன் பொருள்? மேகம்
6. உபகாரி என்பதன் பொருள்? வள்ளல்
7. பகைவரை வென்றதைப் பாடுவது? பரணி
8. இசைப்பாடல் நூல் எது? பரிபாடல்
9. முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப் புகழ் பெற்றவன் யார்? பாரி
10. புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தரத் துணிந்தவன் யார்? குமண வள்ளல்
11. பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் யார்? உடுமலை நாராயணக்கவி
12. தமது திரைப்பட பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளை பரப்பியவர் யார்? உடுமலை நாராயணக்கவி
13. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்? பரணி
14. வானில் ----- கூட்டம் திரண்டதால் மழை பொழியும்? முகில்
15. 'இரண்டல்ல 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? இரண்டு + அல்ல
16. 'தந்துதவும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? தந்து + உதவும்
17. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தேழுதக் கிடைக்கும் சொல்?ஒப்புமையில்லாத