6th தமிழ்-இயல் 6.5 சுட்டு எழுத்துகள்-வினா எழுத்துகள்

6th தமிழ்-இயல் 6.5 சுட்டு எழுத்துகள்-வினா எழுத்துகள்
: :

6.4 உழைப்பே-மூலதனம்
1. ”பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்” என்பது யாருடைய அறிவுரை? ஔவையார்

6.5 சுட்டு எழுத்துகள்-வினா எழுத்துகள்
1. ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் ----- என்று பெயர்? சுட்டு எழுத்துகள்
2. சுட்டு எழுத்துகள் எத்தனை? மூன்று (அ, இ, உ)
3. தற்போது எந்த எழுத்தைச் சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை? உ
4. சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது ----- எனப்படும்? அகச்சுட்டு
5. அகச்சுட்டு எடுத்துக்காட்டு தருக? இவன், அவன், இது, அது
6. சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது ----- எனப்படும்? புறச்சுட்டு
7. புறச்சுட்டு எடுத்துக்காட்டு தருக? அவ்வானம் - இம்மலை - இந்நூல்
8. நம் அருகில் (அண்மையில்) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது ----- எனப்படும்? அண்மைச்சுட்டு
9. அண்மைச்சுட்டுக்குரிய எழுத்து எது? ‘இ’
10. அண்மைச்சுட்டு எடுத்துக்காட்டு தருக? இவன், இவர், இது, இவை, இம்மரம், இவ்வீடு
11. தொலைவில் (சேய்மையில்) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது ----- எனப்படும்? சேய்மைச்சுட்டு
12. சேய்மைச்சுட்டுக்குரிய எழுத்து எது? ’அ’
13. சேய்மைச்சுட்டு எடுத்துக்காட்டு தருக? அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம்
14. அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ----- என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது? ‘உ’
15. அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது ----- எனப்படும்? சுட்டுத்திரிபு
16. வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு ----- என்று பெயர்? வினா எழுத்துகள்
17. வினா எழுத்துகள் எத்தனை? ஐந்து (எ, யா, ஆ, ஓ, ஏ)
18. மொழியின் முதலில் வரும் வினா எழுத்துகள் எவை? எ, யா (எங்கு, யாருக்கு)
19. மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்துகள் எவை? ஆ, ஓ (பேசலாமா, தெரியுமோ)
20. மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்துகள் எவை? ஏ (ஏன், நீதானே)
21. வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது ----- எனப்படும்? அகவினா
22. அகவினா எடுத்துக்காட்டு தருக? எது, யார், ஏன்
23. வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது ----- எனப்படும்? புறவினா
24. புறவினா எடுத்துக்காட்டு தருக? அவனா? வருவானோ?
25. கலைச்சொல் அறிவோம்: 
பண்டம் - Commodity
கடற்பயணம் - Voyage
பயணப்படகுகள் - Ferries
தொழில் முனைவர் - Entrepreneur
பாரம்பரியம் - Heritage
கலப்படம் - Adulteration
நுகர்வோர் - Consumer
வணிகர் - Merchant