7th தமிழ் இயல் 3.4 கப்பலோட்டிய-தமிழர்

7th தமிழ் இயல் 3.4 கப்பலோட்டிய-தமிழர்
: :

1. இந்தியக் கடலாட்சி எமதே எனக் கருதி இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறிமயங்கக் கப்பலோட்டிய தமிழர் யார்? சிதம்பரனார்
2. கப்பலோட்டிய தமிழர் என சிறப்பிக்கப்படுபவர் யார்? சிதம்பரனார்
3. கொற்கை பெருந்துறையின் வழித்தோன்றல் துறைமுகம் எது? தூத்துக்குடி துறைமுகம்
4. கொற்கை துறைமுகத்தில் யாருடைய கொடி பறந்தது? பாண்டிய மன்னர்களின் கொடி
5. "வசையொழிய வாழ்வாரே வாழ்வார்" என்று கூறியவர் யார்? திருவள்ளுவர்
6. சுதேச கப்பல் கம்பெனியை உருவாக்கியவர் யார்? சிதம்பரனார்
7. சுதேச கப்பல் கம்பெனியின் செயலாளர் யார்? சிதம்பரனார்
8. சுதேச கப்பல் வெள்ளோட்டம் பார்ப்பதற்காக எந்த துறைமுகத்தை நோக்கி சென்றது? கொழும்புத் துறைமுகம்
9. வந்தே மாதரம் என்ற சுதேச மந்திரம் எந்த நாட்டில் பிறந்தது? வங்க நாட்டில்
10. சுதேச கப்பல் கம்பெனியின் தலைவர் யார்? பாண்டிதுரையர்
11. சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்று கூறியவர் யார்? பாலகங்காதர திலகர்
12. "வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்" என்ற பாடல் வரியை பாடியவர்? பாரதியார்
13. 'சிதம்பரனாரின் பிரசாங்கத்தையும், பாரதியின் பாட்டையும் கேட்டல் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெரும் ' என்று கூறியவர் யார்? நீதிபதி பின்ஹே
14. சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைதண்டனை வழங்கிய நீதிபதி யார்? நீதிபதி பின்ஹே
15. சிதம்பரனார் எந்த சிறைச் சாலைகளில் கொடும் பணி செய்தார்? கோவைச் சிறையிலும் மற்றும் கண்ணனுர்ச் சிறையிலும்
16. சிதம்பரனார் செய்த தொழில்? வக்கீல் தொழில்
17. சிதம்பரனார் யாருடன் உறவு கொண்டு செந்தமிழ் நூல்களை கற்றார்?  பாண்டிதுரையாருடன்
18. சிதம்பரனார் எதை படித்து தொல்லையெல்லாம் மறந்தார்?  தொல்காப்பியம்
19. சிதம்பரனார் எதை படித்து இன்னல்களையெல்லாம் மறந்தார்? இன்னில்
20. ஆங்கிலத்தில் ஆலன் என்பவர் எழுதிய நூலை "மனம் போல் வாழ்வு" என்று தமிழில் மொழிபெயர்த்தவர் யார்? சிதம்பரனார்