8th தமிழ் இயல் 4.5 வேற்றுமை
1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை ----- என்பர்? வேற்றுமை
2. பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை ----- என்று கூறுவர்? வேற்றுமை உருபுகள்
3. சில இடங்களில் உருபுகளுக்குப் பதிலாக முழுச்சொற்களே வேற்றுமை உருபாக வருவதும் உண்டு. அவற்றைப் ----- என்பர்? சொல்லுருபுகள்
4. வேற்றுமை உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்களை? வேற்றுமைக் தொடர்கள் என்பர்
5. வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அஃது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அதனை ----- என்பர்? வேற்றுமைத் தொகை
6. வேற்றுமை எத்தனை வகைப்படும்? எட்டு (அவை) முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை
7. முதல் வேற்றுமைக்கும், எட்டாம் வேற்றுமைக்கு? உருபுகள் இல்லை
8. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை முடிய ஆறு வேற்றுமைக்கு? உருபுகள் உண்டு
9. எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளை தருவது? முதல் வேற்றுமை
10. இரண்டாம் வேற்றுமை உருபு எது? ஐ
11. இரண்டாம் வேற்றுமைக்கு எடுத்துக்காட்டு தருக? கபிலர் பரனாரைப் புகழ்ந்தார் கபிலரைப் பரணர் புகழ்ந்தார்
12. இரண்டாம் வேற்றுமையின் மற்றோரு பெயர் என்ன?செயப்படுபொருள் வேற்றுமை
13. இரண்டாம் வேற்றுமை எத்தனை பொருள்களில் வரும்? ஆறு
14. மூன்றாம் வேற்றுமை உருபுகள் எவை? ஆல், ஆன், ஓடு, ஓடு
15. கருவிப் பொருள் எத்தனை வகைப்படும்? இருவகைப்படும் (முதற்கருவி, துணைக்கருவி)
16. நான்காம் வேற்றுமை உரிய உருபு எது? கு
17. பெயர்ச்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது ----- ஆகும்? வேற்றுமை
18. எட்டாம் வேற்றுமை ----- வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது? விளி
19. உடனிகழ்ச்சிப் பொருளில் ----- வேற்றுமை வரும்? மூன்றாம்
20. 'அறத்தான் வருவதே இன்பம்' - இத்தொடரில் ----- வேற்றுமை பயின்று வந்துள்ளது? மூன்றாம்
21. "மலர் பானையை வனைந்தாள்" - இத்தொடர் ----- பொருளைக் குறிக்கிறது? ஆக்கல்