10th தமிழ் இயல் 9.3 தேம்பாவணி

1. தேம்பாவணியை இயற்றியது யார்? வீரமாமுனிவர்
2. "உவமணி கானம்கொல் என்று ஒலித்து அழுவ போன்றே" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? வீரமாமுனிவர்
3. கிறித்துவிற்குமுன் தோன்றியவர் யார்? திருமுழுக்கு யோவான்
4. கிறித்துவின் வருகையை அறிவித்தவர் யார்? திருமுழுக்கு யோவான்
5. திருமுழுக்கு யோவானை எவ்வாறு அழைப்பர்? அருளப்பன்
6. வீரமாமுனிவர் திருமுழுக்கு யோவானை தன் காப்பியத்தில் என்ன பெயரில் குறிப்பிடுகிறார்? கருணையன்
7. கருணையன் தாயாரின் பெயர் என்ன? எலிசபெத் அம்மையார்
8. கருணையன் யார் இறப்பால் துன்பம் அடைகிறார்? தன் தாயார் எலிசபெத் இறந்து விட்டதால்
9. கருணையன் துன்பத்தில் பங்கு கொண்டது யார்? இயற்கை
10. சேக்கை என்பதன் பொருள் என்ன? படுக்கை
11. யாக்கை என்பதன் பொருள் என்ன? உடல்
12. பிணித்து என்பதன் பொருள் என்ன? கட்டி
13. வாய்ந்த என்பதன் பொருள் என்ன? பயனுள்ள
14. இளங்கூழ் என்பதன் பொருள் என்ன? இளம்பயிர்
15. காய்ந்தேன் என்பதன் பொருள் என்ன? வருந்தினேன்
16. அசும்பு என்பதன் பொருள் என்ன? நிலம்
17. தேம்ப என்பதன் பொருள் என்ன? வாட
18. புழை என்பதன் பொருள் என்ன? துளை
19. உய்முறை என்பதன் பொருள் என்ன? வாழும் வழி
20. ஓர்ந்து என்பதன் பொருள் என்ன? நினைத்து
21. துணர் என்பதன் பொருள் என்ன? மலர்கள்
22. படலை என்பதன் பொருள் என்ன? மாலை
23. உவமணி என்பதன் பொருள் என்ன? மணமலர்
24. கருணையன் யார் மார்பில் மாலையென அசைந்து வாழ்ந்தார்? தன் தாயின் மார்பில்
25. கருணையன் புலம்பியதை கேட்டு யார் அழுதனர்? மலர்கள், பறவைகள், வண்டுகள்
26. வீரமாமுனிவர் யாரை சந்திப்பதற்காக உருது மொழி கற்றார்? திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னருடன் உரையாட
27. வீரமாமுனிவர் எத்தனை மாதங்களில் உருது மொழியைக் கற்றார்? 2 மாதங்களில்
28. வீரமமுனிவருக்கு சந்தாசாகிப் வழங்கிய பட்டம் என்ன? இஸ்மத் சன்னியாசி
29. இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீக சொல்லுக்கு பொருள் என்ன? தூய துறவி
30. தேம்பா + அணி என்பதன் பொருள் என்ன? வாடாத மாலை
31. தேன் + பா + அணி என்பதன் பொருள் என்ன? தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு
32. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர் யார்? கிருத்துவின் தந்தையாகிய சூசையப்பர்
33. தேம்பாவணி எத்தனை காண்டங்கள் உடையது? 3 காண்டங்கள்
34. தேம்பாவணியில் உள்ள படலங்களின் எண்ணிக்கை? 36 படலங்கள்
35. தேம்பாவணியில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை? 3615 பாடல்கள்
36. தேம்பாவணி இயற்றப்பட்ட காலம் என்ன? 17ம் நூற்றாண்டு
37. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன? கான்சுடான்சு சோசப் பெசுகி
38. தமிழின் முதல் அகராதி எது? சதுரகராதி
39. தமிழின் முதல் சதுரகராதியை எழுதியவர் யார்? வீரமாமுனிவர்
40. தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்) என்ற என்ற எழுதியவர் யார்? வீரமாமுனிவர்
41. பரமார்த்த குரு கதைகளை இயற்றியவர் யார்? வீரமாமுனிவர்
42. காக்கென்று என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன? காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
43. கணீர் என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன? கண்ணீர் என்பதன் இடைக்குறை
44. காய்மணி என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன? வினைத்தொகை
45. உய்மணி என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன? வினைத்தொகை
46. செய்மணி என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன? வினைத்தொகை
47. மெய்முறை என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன? வேற்றுமைத்தொகை
48. கைமுறை என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன? மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை