10th தமிழ் இயல் 1.3 இரட்டுற-மொழிதல்

தமிழழகனார், இரட்டுறமொழிதல், கி. ஆ. பெ. விசுவநாதன்

10th தமிழ் இயல் 1.3 இரட்டுற-மொழிதல்
: :

1. முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மொத்த வணிகலமும் மேவலால் - நித்தம் என தொடங்கும் பாடலின் ஆசிரியர்? தமிழ் அழகனார்
2. சந்தக்கவிமணி பாடிய இரட்டுறமொழிதல் பாடலின் தமிழ் எதனுடன் ஒப்புமை படுத்தப்பட்டுள்ளது? ஆழி
3. துய்ப்பது என்பதன் பொருள்? கற்பது, தருதல்
4. மேவலால் என்பதன் பொருள்? பொருந்துதலால், பெறுதலால்
5. மூன்று வகையான சங்குகள் எவை? வெண்சங்கு, சலஜ்சலம், பாஜ்சசன்யம்
6. இரட்டுற மொழிதலின் மற்றொரு பெயர் என்ன? சிலேடை
7. ஒரு சொல்லோ, சொற்றோடரோ இருபொருள்பட வருவது? இரட்டுற மொழிதல் எனப்படும்
8. சந்தக் கவிமணி எனக் குறிப்பிடப்படுவர் யார்? தமிழழகனார்
9. தனிப்பாடல் திரட்டு என்ற நூலின் ஆசிரியர் யார்? புலவர் பலரால் பாடப்பட்டது
10. தமிழழகனாரின் இயற்ப்பெயர் என்ன? சண்முக சுந்தரம்
11. தமிழழகனார் எத்தனை நூல்களை படைத்துள்ளார்? 12 சிற்றிலக்கியங்கள்
12. இரட்டுறமொழிதல் பாடலில் 'முத்தமிழ் ' என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமை படுத்தப்பட்டுள்ளது? முத்தினை அமிழ்ந்து எடுத்தல்
13. இரட்டுறமொழிதல் பாடலில் முச்சங்கம் என்பது கடலுக்கு இவ்வாறு ஒப்புமை படுத்தப்படுகிறது? மூன்று வகையான சங்கு தருதல்
14. தமிழின் மொத்த அணிகலன்கள் எனக் குறிப்பிடப்படும் நூல்கள்? ஐம்பெரும்காப்பியம்
15. இரட்டுறமொழிதல் பாடலில் மெத்த வணிகலன் என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமை படுத்தப்படுகிறது? மிகுதியான வணிகக் கப்பல்
16. இரட்டுறமொழிதல் பாடலில் சங்கத்தவர் காக்க என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமை படுத்தப்படுகிறது? நீர் நிலையை தடுத்து நிறுத்தி சங்கினை காத்தல்
17. காலையிலேயே மாலையும் வந்து விட்டது என சிலடையாக கூறியவர் யார்? கி. வா. ஜகந்நாதன்
18. "அன்று அவர் கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்" என்று கூறியவர்? இசை விமர்சகர் சுப்புடு
19. முத்தமிழ் என்பது? இயல், இசை, நாடகம்
20. முச்சங்கம் என்பது? முதல், இடை, கடை
21. மெத்த வணிகலன் (மெத்த + அணிகலன்) என்பது? ஐம்பெரும் காப்பியங்கள்
22. சங்கத்தவர் காக்க என்பது? சங்கப் பலகையிலிருந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தமை
23. முத்தமிழ் கடல் விளக்கம் என்பது? முத்தினை அமிழ்ந்து எடுத்தல்
24. முச்சங்கம் கடல் விளக்கம் என்பது? மூன்று வகையான சங்குகள் தருதல்
25. மெத்த வணிகலன் கடல் விளக்கம்? மிகுதியான வணிகக் கப்பல்கள்
26. சங்கத்தவர் காக்க கடல் விளக்கம்? நீர்லையை தடுத்து நிறுத்தி, சங்கினை காத்தல்
27. "அன்று அவர் கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்" என்று கூறியவர்? இசை விமர்சகர் சுப்புடு
28. பல் மருத்துவத்தில் சிறப்பு பட்டம் பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தபோது "இவர் பல்துறை வித்தகர்" என்று அறிமுகப்படுத்தியவர் யார்? கி. ஆ. பெ. விசுவநாதன்