10th தமிழ் இயல் 1.2 தமிழ்ச்சொல்-வளம்

மகாகவி பாரதியார், கால்டுவெல், இரா. இளங்குமரனார், திரு. வி. க, தேவநேயப் பாவாணர்

10th தமிழ் இயல் 1.2 தமிழ்ச்சொல்-வளம்
: :

1. நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர் யார்? மகாகவி பாரதியார்
2. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்? கால்டுவெல்
3. நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது? தாள்
4. கீரை, வாழை முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது? தண்டு
5. நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது? கோல்
6. குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது? தூறு
7. கம்பு, சோளம் முதலிவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது? தட்டு அல்லது தட்டை
8. கரும்பின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது? கழி
9. மூங்கிலின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது? கழை
10. புளி, வேம்பு முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது? அடி
11. அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை எவ்வாறு அழைக்கப்படுகிறது? கவை
12. கதையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? கொம்பு அல்லது கொப்பு
13. கொம்பின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? கிளை
14. கிளையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? சினை
15. சினையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? போத்து
16. போத்தின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? குச்சு
17. குச்சியின் பிரிவு எவ்வவாறு அழைக்கப்படுகிறது? இணுக்கு
18. காய்ந்த சுள்ளி தாவரத்தின் பகுதிக்கு வழங்கும் சொல்? காய்ந்த குச்சு (குச்சி)
19. காய்ந்த விறகு தாவரத்தின் பகுதிக்கு வழங்கும் சொல்? காய்ந்த சிறுகிளை
20. காய்ந்த வெங்கழி தாவரத்தின் பகுதிக்கு வழங்கும் சொல்? காய்ந்த கழி
21. காய்ந்த கட்டை தாவரத்தின் பகுதிக்கு வழங்கும் சொல்? காய்ந்த கொம்பும் கவையும் அடியும்
22. புளி, வேம்பு முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? இலை
23. நெல், புல் முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? தாள்
24. சோளம், கரும்பு முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? தோகை
25. தென்னை, பனை முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஓலை
26. காய்ந்த தாளும், தோகையும் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சண்டு
27. காய்ந்த இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? சருகு
28. நெல், புல் முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது? துளிர் அல்லது தளிர்
29. புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது? முறி அல்லது கொழுந்து
30. சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது? குருத்து
31. கரும்பின் நுனிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? கொழுந்தாடை
32. பூவின் தோற்றநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? அரும்பு
33. பூ விரியத் தொடங்கும் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? போது
34. பூவின் மலர்ந்த நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? மலர் (அலர்)
35. மரஞ்செடியின் பூ கீழேவிழுந்த நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? வீ
36. பூ வாடின நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? செம்மல்
37. செல்லாராய்ச்சியில் பாவாணாரும் வியந்த பெருமகனார் யார்? தமிழ்த்திரு இரா. இளங்குமரனார்
38. திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவியவர் யார்? இரா. இளங்குமரனார்
39. திருவள்ளுவர் தவச்சாலையை இரா. இளங்குமரனார் எங்கு நிறுவினார்? திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அல்லூரில்
40. தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர் யார்? இரா. இளங்குமரனார்
41. பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்? இரா. இளங்குமரனார்
42. தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர் யார்? இரா. இளங்குமரனார்
43. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழே இழந்து விடக்கூடாது என்று எண்ணியவர் யார்? இரா. இளங்குமரனார்
44. இமைகளை மூடி எழுதும் ஆற்றலை பெற்றவர் யார்? திரு. வி. க
45. திரு. வி. க போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் யார்? இரா. இளங்குமரனார்
46. தமிழ்தென்றல் என அழைக்கப்படுகிறது யார்? திரு. வி. க
47. தமிழ்த்திரு இரா. இளங்குமரனார் எழுதிய நூல்கள் யாவை? இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம்
48. பூம்பிஞ்சு என அழைக்கப்படுவது எது? பூவோடு கூடிய இளம்பிஞ்சு
49. பிஞ்சு என அழைக்கப்படுவது எவை? இளம் காய்
50. வடு என அழைக்கப்படுவது எது? மாம்பிஞ்சு
51. மூசு என அழைக்கப்படுவது? பலாப்பிஞ்சு
52. கவ்வை என அழைக்கப்படுவது? எள்பிஞ்சு
53. குரும்பை என அழைக்கப்படுவது? தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு
54. முட்டுக் குரும்பை என அழைக்கப்படுவது? சிறு குரும்பை
55. நுழாய் என அழைக்கப்படுவது? இளநெல்
56. கச்சல் என அழைக்கப்படுவது? வாழைப்பிஞ்சு
57. அவரை, துவரை முதலியவற்றின் குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது? கொத்து
58. வாழைக் குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது? தாறு
59. கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர் குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது? கதிர்
60. நெல், திணை முதலியவற்றின் கதிர் குலைவகை எவ்வாறு அழைக்கப்ப்படுகிறது? அலகு அல்லது குரல்
61. வாழைத்தாற்றின் பகுதி குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது? சீப்பு
62. நுனியில் சுருங்கிய காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சூம்பல்
63. சுருங்கிய பழம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சிவியல்
64. புழுபூச்சி அரித்த காய் கனி எவ்வாறு அழைக்கப்படுகிறது? சொத்தை
65. சூட்டினால் பழுத்த பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படுகிறது? வெம்பல்
66. குளுகுளுத்த பழம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? அளியல்
67. குளுகுளுத்த நாறிய பழம் அல்லது காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது? அழுகல்
68. பதராயப் போன மிளகாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சொண்டு
69. கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்டகாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது? கோட்டான் காய் அல்லது கூகைக்காய்
70. தேரை அமர்ந்ததினால் கெட்டகாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது? தேரைக்காய்
71. தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது? அல்லிக்காய்
72. தென்னையில் கெட்ட காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஒல்லிக்காய்
73. தொலி என்றால் என்ன? மிக மெல்லியது
74. தோல் என்றால் என்ன? திண்ணமானது
75. ஓடு என்றால் என்ன? மிக வன்மையானது
76. தோடு என்றால் என்ன? வன்மையானது
77. குடுக்கை என்றால் என்ன? சுரையின் ஓடு
78. மட்டை என்றால் என்ன? தேங்காய் நெற்றின் மேற்பகுதி
79. உமி என்றால் என்ன? நெல், கம்பு முதலியவற்றின் மூடி
80. கொம்மை என்றால் என்ன? வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி
81. கூலம் என்றால் என்ன? நெல், புல் (கம்பு) முதலிய தானியங்கள்
82. பயறு என்றால் என்ன? அவரை, உளுந்து முதலியவை
83. கடலை என்றால் என்ன? வேர்க்கடலை, கொண்டக்கடலை முதலியவை
84. விதை என்றால் என்ன? கத்திரி, மிளகாய் முதலியவற்றின் வித்து
85. காழ் என்றால் என்ன? புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து
86. முத்து என்றால் என்ன? வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து
87. கொட்டை என்றால் என்ன? மா, பனை முதலியவற்றின் வித்து
88. தேங்காய் என்றால் என்ன? தென்னையின் வித்து
89. முதிரை என்றால் என்ன? அவரை, துவரை முதலிய பயறுகள்
90. நாற்று என்றால் என்ன? நெல், கத்திரி முதலியவற்றின் இளநிலை
91. கன்று என்றால் என்ன? மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை
92. குருத்து என்றால் என்ன? வாழையின் இளநிலை
93. பிள்ளை என்றால் என்ன? தென்னையின் இளநிலை
94. குட்டி என்றால் என்ன? விளாவின் இளநிலை
95. மடலி அல்லது வடலி என்றால் என்ன? பனையின் இளநிலை
96. பைங்கூல் என்றால் என்ன? நெல், சோளம், முதலியவற்றின் பசும் பயிர்
97. இலையை குறிக்கும் தமிழ் சொற்கள் யாவை? தாள், இலை, தோகை, ஓலை
98. கோதுமையின் வகைகள்? சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை
99. தமிழ்நாட்டு நெல்லின் வகைகள் யாவை? செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும் சம்பா, மட்டை, கார் என பலவகை உண்டு
100. சம்பா நெல் வகைகள் மொத்தம் எத்தனை உள்ளன? 60 வகை
101. ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது? மலேசியா
102. உலக மொழி மாநாட்டில் எந்த மொழிக்காக நடத்தப்பட்டது? தமிழ் மொழி
103. ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே என கூறியவர்? பன்மொழிப் புலவர் கஅப்பாத்துரையார்
104. தமிழ்நாட்டில் மட்டும் விளையும் சிறுதானியங்கள் எவை? வரகு, குதிரைவாலி, காடைக்கண்ணி
105. மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுவர் யார்? தேவநேய பாவாணர்
106. தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது? தேவநேயப் பாவாணரின் சொல்லாய்வு கட்டுரைகள்
107. உலகத் தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர் யார்? தேவநேயப் பாவாணர்
108. தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர் யார்? தேவநேய பாவாணர்
109. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டஇயக்குனராக பணியாற்றியவர் யார்? தேவநேயப் பாவாணர்
110. இந்திய மொழிகளிலேயே மேலை நாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது? தமிழ் மொழி
111. முதன் முதலில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் எது? கார்டிலா
112. போர்ச்சுகீசிய நாட்டின் தலைவர் எது? லிசுபன்
113. கார்டிலா என்னும் நூல் முதன் முதலில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட ஆண்டு? 1554
114. ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்ட கார்டிலா என்ற நூலின் முழுப் பெயர் என்ன? carthila de lingoa tamul e portugues
115. கார்டிலா என்ற நூல் எந்த வண்ணங்களில் மாறி மாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது? கருப்பு, சிவப்பு
116. இலையைக் குறிக்கும் தமிழ் சொற்கள் யாவை? leaf