மின்காந்த அலைகள் பரப்புகை
மின்காந்த அலைகள் பரப்புகை Propagation of Electro Magnetic Waves

ஒரு இருட்டறையில் ஒரு தீக்குச்சியை கொளுத்துகிறீர் களென்று கொள்வோம். அதிலிருந்து வெளிக்கிளம்பும் ஒளி எங்கும் சம அளவில் இடைவெளி எதுவுமில்லாமல் பரவிவிடு வகைப் பார்க்கிறோம். அவ் ஒளி சுவரில் விழும்பொழுது சுவற்றில் ஓர் ஊசிமுனை இடைவெளிகூட இல்லாமல் பரவலாக வெளிச்சம் கொடுப்பதை பார்க்க முடிகிறது. அந்த ஒளி அலையும் மின்காந்த அலைதான்.
இதேபோல் ஒரு ரேடியோ ட்ரான்ஸ்மிட்டரின் ஏரியலி லிருந்து வெளிக்கிளம்பிய, ரேடியோ- டெலிவிஷன் அலைகளும் இடைவெளி எதுவுமில்லாமல் பரவலாக (Homogen- ously) பரவி விடுகின்றன. தீக்குச்சி நெருப்பிலிருந்து வெளிக்கிளம்பிய அலைகளின் தன்மையை கண்ணால் பார்க்க முடிகிறது. ஆனால் ரேடியோ அலைகளின் தன்மை கண்களுக்கு புலப்படுவதில்லை. இதே போல்,
ரேடியோ அலைகள் | - Radio Waves |
உஷ்ணக் கதிர்கள் | - Heat Waves |
ஒளிக்கதிர்கள் | - Light Waves |
எக்ஸ்ரேய்ஸ் | - X-Rays |
காமாரேய்ஸ் | - Gamarays |
காஸ்மிக்ரேய்ஸ் | - Cosmicrays |
எல்லாம் மின்காந்த அலைகள்தான். அவைகள் எல்லாம் ஒரு வினாடியில் போய்ச்சேரும் தூரம் 300,000,000 மீட்டர் தான். ஆனால் அலைகளின் நீளத்திலும், துடிப்பிலும்தான். வித்தியாசமிருக்கின்றன.