6th தமிழ்-இயல் 1.1 இன்பத்தமிழ்

6th தமிழ்-இயல் 1 - தமிழ்த்தேன்
1.1 இன்பத்தமிழ்
1. "தமிழுக்கு அமுதென்றுபேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? பாரதிதாசன்
2. 'நிருமித்த' என்பதன் பொருள் என்ன? உருவாக்கிய
3. 'சமூகம்' என்பதன் பொருள் என்ன? மக்கள் குழு
4. 'விளைவு' என்பதன் பொருள் என்ன? விளைச்சல்
5. 'அசதி' என்பதன் பொருள் என்ன? சோர்வு
6. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன? சுப்புரத்தினம்
7. சுப்புரத்தினம் பாரதியார் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை எவ்வாறு மாற்றிக் கொண்டார்? பாரதிதாசன்
8. பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு முதலான புரட்ச்சிக்கான கருத்துக்களை உள்வாங்கி பாடியவர் யார்? பாரதிதாசன்
9. 'புரட்சிக் கவி' என அழைக்கப்படுபவர் யார்? பாரதிதாசன்
10. 'பாவேந்தர்' என அழைக்கப்படுபவர் யார்? பாரதிதாசன்
11. தமிழை பலவிதமாக போற்றியவர் யார்? பாரதிதாசன்
12. பாரதிதாசன் தமிழுக்கு இட்ட பெயர் என்ன? அமுது, நிலவு, மணம்
13. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு எவ்வாறு இருக்கும்? அசதியாக
14. "தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா! உனக்கும் எனக்கும், அமிழ்தே நீ இல்லை என்றால் அத்துனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்" என்ற பாடலின் ஆசிரியர் யார்? கவிஞர் காசி ஆனந்தன்
15. உயிருக்கு இணையானது என்று பாரதிதாசன் எதை கூறுகிறார்? அமுதம் போன்ற தமிழ்
16. "கண்ணே மணியே" என்று குழந்தையை கொஞ்சிவது போல செந்தமிழுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தவர் யார்? பாரதிதாசன்
17. பொருத்துக:
i. விளைவுக்கு - நீர்
ii. அறிவுக்கு - தோள்
iii. இளமைக்கு - பால்
iv. புலவர்க்கு - வேல்
v. அசதி - சோர்வு
18. நிலவு + என்று சேர்த்து எழுதுக? நிலவென்று
19. தமிழ் + எங்கள் சேர்த்து எழுதுக? தமிழெங்கள்
20. ஏற்றத் தாழ்வற்ற ____ அமைய வேண்டும்? சமூகம்
21. அமுதென்று பிரித்து எழுதுக? அமுது + என்று