10th தமிழ் இயல் 6.1 நிகழ்கலை

10th தமிழ் இயல் 6.1 நிகழ்கலை
: :

1. மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்று எது? கரகாட்டம்
2. பித்தளை செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்து தாளத்திற்கு ஏற்ப ஆடுவது? கரகாட்டம்
3. கரகாட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? கரகம், கும்பாட்டம்
4. கரகச் செம்பில் எதனை நிரப்புகின்றனர்? மணல், பச்சரிசி
5. கரகச் செம்பில் எந்த பொம்மையை வைத்து ஆடுகின்றார்? கிளி பொம்மை பொருந்திய மூங்கில் குச்சியை
6. கரகாட்டத்தில் எந்த இசை கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன? நையாண்டி மேள இசையும், நாகசுரம், தவில், பம்பை போன்ற இசைக் கருவிகள்
7. "நீரற வரியாகக் கரகத்து "என்ற வரி இடம் பெற்ற நூல் எது? புறநானூறு
8. சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் ஒன்று எது? குடக்கூத்து
9. தமிழகத்தில் கரகாட்டம் நடைபெறும் மாவட்டங்கள் யாவை? மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கோயம்பத்தூர், திருநெல்வேலி
10. கரகாட்டத்திற்கு அடிப்படை எனக் கருதப்படுவது? குடக்கூத்து
11. மயில் வடிவுள்ள கூட்டுக்கு ஒருவர் தன் உருவத்தை மறைத்துக்கொண்டு, நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டம்? மயிலாட்டம்
12. நையாண்டி மேளம் இசைக்க, காலில் காட்டப்பட்டுள்ள சலங்கை ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடிக்காட்டும் ஆட்டம் எது? மயிலாட்டம்
13. கரகாட்டத்தின் துணையாட்டம் எது? மயிலாட்டம்
14. கா என்பதற்கு ----- என்று பொருள்? பாரந்தங்கும் கோல்
15. இருமுனைகளிலும் சம எடைகளை கட்டிய தண்டினை தோளில் சுமந்து ஆடுவது? காவடியாட்டம்
16. காவடி அமைப்பிற்குரிய ஏற்ப எவ் வாறு எல்லாம் அழைக்கப்படுகிறது? மச்சக்காவடி, சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, பறவைக்காவடி
17. காவடியாட்டம் நிகழ்த்தப்படும் நாடுகள் யாவை? இலங்கை, மலேசியா மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில்
18. ஒரே நிறுத் துணியை முண்டாசுபோலக் கட்டியும், காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடும் ஆட்டம் எது? ஒயிலாட்டம்
19. ஒயிலாட்டத்தை யார் பெரும்பாலும் ஆடுகின்றனர்? ஆண்கள்
20. ஒயிலாட்டத்திற்க்கு இசைக்கப்படும் இசைக்கருவி யாவை? தோலால் கட்டப்படும் குடம், தவில், சிங்கி, டோலக், தப்பு
21. வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுவது எது? தேவராட்டம்
22. ஆண்கள் மட்டும் ஆடும் ஆட்டம் எது? தேவராட்டம்
23. தேவராட்டத்திற்கு இசைக்கப்படும் இசைக்கருவி எது? உறுமி (தேவதுந்துபி)
24. தேவதுந்துபி என அழைக்கப்படுவது எது? உறுமி
25. தேவராட்டத்திற்கு எத்தனை பேர் கலந்து கொள்ளவேண்டும் என்ற பொது மரபு உள்ளது? 8 முதல் 13 கலைஞர்கள்
26. எந்த ஆட்டத்திற்கு வேட்டி கட்டியும், தலையிலும் இடையிலும் சிறுதுனி கடியும் கால்களில் சலங்கை அணிந்தும் எளிய ஒப்பனையுடன் ஆடப்படும் ஆட்டம்? தேவராட்டம்
27. தேவராட்டம் போன்ற ஆடப்பட்டு வருகின்ற கலை எது? சேர்வையாட்டம்
28. சேர்வையாட்டத்தில் ஆட்டக்கலைஞர்கள் எந்தெந்த இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு ஆடுகின்றன? சேவைபலகை, சேமக்கலம், ஜால்ரா
29. இசைசார்புக் கலையாகவும், வழிபாட்டுக் கலையாகவும் ஆடப்படும் ஆட்டம் எது? சேர்வையாட்டம்
30. "போலச் செய்தல்" என்ற பண்புகளை பின்பற்றி நிகழ்த்தி காட்டும் கலைகளில் ஒன்று? பொய்க்கால் குதிரையாட்டம்
31. மரத்தாலான பொய்காலில் நின்றுக்கொண்டு குதிரைவடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்துகொண்டும் ஆடும் ஆட்டம்? பொய்க்கால் குதிரையாட்டம்
32. அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் எது? பொய்க்கால் குதிரையாட்டம்
33. புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆட்டம்? பொய்க்கால் குதிரையாட்டம்
34. பொய்க்கால் குதிரையாட்டம் யாருடைய காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக கருதப்படுகிறது? மராட்டியர் காலத்தில்
35. பொய்க்கால் குதிரையாட்டம் ராஜஸ்தானில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? கச்சிக்கொடி
36. பொய்க்கால் குதிரையாட்டம் கேரளாவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? குதிரைக்களி
37. எந்த ஆட்டத்திற்கு பாடல்கள் பயன்படுத்தப் படுவதில்லை? பொய்க்கால் குதிரையாட்டம்
38. பொய்க்கால் குதிரையாட்டத்திற்கு இசைக்கப்படும் கருவிகள் யாவை? நாகசுரம், நையாண்டி மேளம்
39. 'தப்பு ' என்ற தோற்கருவியை இசைத்துக்கொண்டே அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற நிகழ்கலை? தப்பாட்டம்
40. ஆண்கள் மட்டும் ஆடிவந்த எந்த ஆட்டம் தற்போது பெண்களாலும் ஆடப்படும் ஆட்டம்? தப்பாட்டம்
41. தப்பு ஆட்டத்தின் வேறு பெயர்கள் யாவை? தப்பாட்டம், தப்பட்டை, தப்பு
42. வட்ட வடிவமாக அமைந்துள்ள அகன்ற தோற்கருவியின் பெயர் என்ன? தப்பு
43. தப்பாட்டம் எந்தெந்த நிகழ்ச்சிகளில் ஆடப்படுகிறது? கோவில் திருவிழா, திருமணம், இறப்பு, விழிப்புணர்வு முகாம்
44. தப்பாட்டத்தை எவ்வாறு அழைப்பர்? பறை
45. "தகக தகதக தந்தெந்த தந்தத்தக என்று தாளம் பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெறுக "என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்? திருப்புகழ்
46. தப்பட்டதை பற்றி திருப்புகழில் குறிப்பிட்டுள்ளவர் யார்? அருணகிரிநாதர்
47. ஒன்றை சொல்வதற்கென்றே (பறைதல்) இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக்கருவி? பறை
48. தொல்காப்பியம் குறிப்பிடும் கருப்பொருளில்களில் ஒன்றாக விளங்குவது எது? பறை
49. தமிழ் மக்களின் வீரத்தை சொல்லும் கலையாக விளங்குவது எது? புலியாட்டம்
50. பாட்டும், வசனமமும் இல்லாத ஆட்டம் எது? புலியாட்டம்
51. புலியாட்டத்தில் எத்தனை பேர் ஆடுவர்? ஒருவர் அல்லது இருவர்
52. நாட்டுப்பற்று மக்களால் நிகழ்த்தப்படும் வரும் கலை எது? தெருக்கூத்து
53. திறந்தவெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் வெளிப்படுத்தப்படுத்துவது எந்த ஆட்டம்? தெருக்கூத்து
54. திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாக விளங்குவது எது? தெருக்கூத்து
55. ஒரு கதையை இசை, வசனம், பாடல், ஆடல், மெய்ப்பாடுடன் ஆடப்படும் கலை எது? தெருக்கூத்து
56. தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவார் யார்? கூத்தப்பட்டறை நா. முத்துசாமி என்ற கலைஞாயிறு
57. "நாடகக்கலையை மீட்டெடுக்கும்போது தமது குறிக்கோள்" என்றவர் யார்? கூத்தப்பட்டறை நா. முத்துசாமி என்ற கலைஞாயிறு
58. தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புதுவிதமான நாடகங்களை உருவாக்கியவர் யார்? கூத்துப்பட்டறை நா. முத்துசாமி
59. நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசை முறையை அறிமுகம் செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர் யார்? கூத்துப்பட்டறை நா. முத்துசாமி
60. இந்தியாயாவிலும் மட்டுமின்றி உலகின் பல்வேறு நகரங்களிலும் யாருடைய நாடகங்கள் நடத்தப்பட்டது? கூத்துப்பட்டறை நா. முத்துசாமி
61. கூத்துப்பட்டறை நா. முத்துசாமி அவர்கள் பெற்ற விருதுகள் யாவை? இந்தியா அரசின் தாமரைத்திரு விருதையும், தமிழக அரசின் கலைமாமணி விருது
62. வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது? தெருக்கூத்து
63. அருச்சுனன் தபசு எதை வேண்டி நிகழ்த்தப்படுவதாக இருக்கிறது? மழை வேண்டி
64. எந்த கலையை கதகளி போன்று மாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது? தெருக்கூத்து
65. தோலில் செய்த வெட்டு வரைபடங்களை, விளக்கின் ஒளி ஊடுவுருவும் திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீலும் பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி, உரையாடியும், பாடியும் காட்டுவது? தோற்பாவைக் கூத்து
66. தோலால் ஆன பாவையைக்கொண்டு நிகழ்த்தப்படும் கலையாதலால் ----- என்னும் பெயர் பெற்றது? தோற்பாவை
67. தோற்பாவை கூத்தில் என்ன என்ன இடம்பெறுகின்றன? இசை, ஓவியம், நடனம், நாடகம், பல குரலில் பேசுதல்
68. தோற்பாவை கூத்தில் பாவையின் அசைவு, உரையாடல், இசை, ஆகியனவற்றோடு ----- முதன்மை பெறுகிறது? ஒளியும்
69. மரப்பாவையைப் பற்றி கூறும் நூல் எது? திருக்குறள்
70. பட்டினத்தார் பாடல்கள், திருவாசகப் பாடல்களிலும் எந்த கூத்து பற்றிய செய்திகள் காணமுடிகிறது? தோற்பாவை கூத்து
71. ஊர் ஊராக சென்று நிகழ்த்துகின்ற கூட்டுகுடும்பக் கலையாக விளங்குவது? தோற்பாவை கூத்து
72. தோற்பாவை கூத்து என்னவாக மாற்றம் பெற்றுள்ளது? பொம்மலாட்டம், கையுறைப்பாவை கூத்து
73. மலேசியா தலைநகர் கோலாம்பூரில் உள்ள தெருவிற்கு எந்த மன்னன் பெயர் சூட்டப்பட்டுள்ளது? இராஜராஜ சோழன்
74. இராஜா சோழன் தெரு பற்றி கூறும் நூல் எது? ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மலர்