8th தமிழ் இயல் 9.1 உயிர்க்குணங்கள்

8th தமிழ் இயல் 9.1 உயிர்க்குணங்கள்
: :

1. "அறிவுஅருள் ஆசைஅச்சம்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? இறையரசன்
2. நிறை என்பதன் பொருள் என்ன? மேன்மை
3. பொறை என்பதன் பொருள் என்ன? பொறுமை
4. பொச்சாப்பு என்பதன் பொருள் என்ன? சோர்வு
5. மையல் என்பதன் பொருள் என்ன? விருப்பம்
6. ஓர்ப்பு என்பதன் பொருள் என்ன? ஆராய்ந்து தெளிதல்
7. அழுக்காறு என்பதன் பொருள் என்ன? பொறாமை
8. மதம் என்பதன் பொருள் என்ன? கொள்கை
9. இதழ் என்பதன் பொருள் என்ன? பகை
10. மண்ணும் என்பதன் பொருள் என்ன? நிலைபெற்ற
11. மார்கழி திங்கள் பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு இதனை ----- என்பர்? பாவை நோன்பு
12. திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் எது? திருப்பாவை
13. திருப்பாவை என்ற நூலை இயற்றியவர் யார்? ஆண்டாள்
14. சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் எது? திருவெம்பாவை
15. திருவெம்பாவையை இயற்றியவர் யார்? மாணிக்கவாசகர்
16. இறையரசனின் இயற்பெயர்? சே. சேசுராஜா
17. இறையரசன் என்ன பணியாற்றினார்? கல்லூரி ஒன்றில் தமிழ் பேராசிரியர்
18. கண்ணிப்பாவை என்னும் நூலை இயற்றியவர் யார்? இறையரசன்
19. இறையரசன் எந்த நூலை தழுவி கண்ணிப்பாவை நூலை இயற்றியுள்ளார்? ஆண்டாள் இயற்றிய திருப்பாவை
20. "உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செழுங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் கான்"என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்? திருப்பாவை
21. அடுத்தவர் வாழவைக் கண்டு ----- கொள்ளக்கூடாது? அழுக்காறு
22. நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று? பொச்சாப்பு
23. "இன்பத்துன்பம்"என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது? இன்பம் + துன்பம்
24. குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதுக் கிடைக்கும் சொல்? குணங்களெல்லாம்