8th தமிழ் இயல் 3.1 நோயும்-மருந்தும்

8th தமிழ் இயல் 3.1 நோயும்-மருந்தும்
: :

1. மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவது? நோய்கள்
2. "போர்த்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி தீர்தற்குஉரிய திரியோக மருந்துஇவை"என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்?  நீலகேசி
3. தீர்வன என்பதன் பொருள் என்ன? நீங்குபவை
4. உவசமம் என்பதன் பொருள் என்ன? அடங்கி இருத்தல்
5. நிழல்இகழும் என்பதன் பொருள் என்ன? ஒளிபொருந்திய
6. பேர்தற்கு என்பதன் பொருள் என்ன?  அகற்றுவதற்கு
7. திரியோகமருந்து என்பதன் பொருள் என்ன? மூன்று யோகமருந்து
8. தெளிவு என்பதன் பொருள் என்ன? நற்காட்சி
9. திறந்தன என்பதன் பொருள் என்ன? தன்மையுடையன
10. கூற்றுவா என்பதன் பொருள் என்ன? பிரிவுகளாக
11. பூணாய் என்பதன் பொருள் என்ன? அணிகலன்களை அணிந்தவளே
12. பிணி என்பதன் பொருள் என்ன? துன்பம்
13. ஓர்தல் என்பதன் பொருள் என்ன? நல்லறிவு
14. பிறவார் என்பதன் பொருள் என்ன? பிறக்கமாட்டார்
15. பிறவித்துன்பங்களை தீர்க்கும் மூன்று மருந்துகள் எவை? நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்
16. ஐஞசிறுகாப்பியங்களும் ஒன்று? நீலகேசி
17. நீலகேசி எத்தனை சருக்கங்களைக் கொண்டது? பத்து
18. நீலகேசியின் ஆசிரியர் பெயர்? பெயர் தெரியவில்லை
19. நீலகேசி எந்த சமயத்தைச் சார்ந்த நூல்? சமண சமயம்
20. உடல்நலம் என்பது ----- இல்லாமல் வாழ்தல் ஆகும்? பிணி
21. நீலகேசி கூறும் நோயின் வகைகள்? மூன்று
22. இவையுண்டார் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? இவை + உண்டார்
23. தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? தாமினி