10th தமிழ் இயல் 5.2 நீதி-வெண்பா

10th தமிழ் இயல் 5.2 நீதி-வெண்பா
: :

1. "அருளை பெருக்கி அறிவை திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை" என்ற பாடலின் ஆசிரியர் யார்? கா. ப. செய்குத்தம்பிப் பாவலர்
2. கற்றவர் வழி அரசு செல்லும் என்ற கருத்தைக் கூறிய இலக்கியம் எது? சங்கஇலக்கியம்
3. தோன்றும் அளவு ஊரும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறிய நூல் எது? திருக்குறள்
4. சத்தம் என்பதன் பொருள் என்ன? நூறு
5. ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தல் ----- எனப்படும்? சதாவதானம்
6. உயிருக்கு அரிய துணையாய் இருப்பது எது? கல்வி
7. செய்குத்தம்பிப் பாவலரின் காலம் என்ன? 1874 முதல் 1950 வரை
8. செய்குத்தம்பிப் பாவலர் எங்கு பிறந்தார்? இடலாக்குடி, கன்னியாகுமரி
9. சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர் யார்? செய்குத்தம்பிப் பாவலர்
10. செய்குத்தம்பிப் பாவலர் எந்த வயதில் செய்யும் ஆற்றல் பெற்றார்? 15 ஆம் வயதில்
11. சதாவதானம் என்ற கலையில் சிறந்து விளங்கியவர் யார்? செய்குத்தம்பிப் பாவலர்
12. செய்குத்தம்பிப் பாவலர் எந்த ஆண்டு சென்னை விக்டோரியா அரங்கில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி சதாவதானி என்ற பாராட்டைப் பெற்றார்? 1907 மார்ச் - 10
13. இவருடைய நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபமும், பள்ளியும் எங்கே உள்ளது? இடலாக்குடி