10th தமிழ் இயல் 5.3 திருவிளையாடற்-புராணம்

10th தமிழ் இயல் 5.3 திருவிளையாடற்-புராணம்
: :

1. "நுண்ணிய கேள்வி யாரும் மன்னநீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீ தனிந்தது என்னா" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? திருவிளையாடற் புராணம்
2. பாண்டி நாட்டை ஆட்சி புரிந்தமன்னன் யார்? குசேலப்பாண்டியன்
3. கபிலரின் நண்பர் யார்? இடைக்காடனார்
4. யாரை குசேலப்பாண்டியன் அவமதித்தான்? இடைக்காடனார்
5. மனம் வருந்திய இடைக்காடனார் யாரிடம் முறையிட்டார்? இறைவனிடம்
6. இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு எங்கு சென்று தங்கினார்? வைத்திரு ஆலவாயில்
7. கேண்மையினான் என்பதன் பொருள் என்ன? நட்பினன்
8. கேள்வியினால் என்பதன் பொருள் என்ன? நூல் வல்லான்
9. தார் என்பதன் பொருள் என்ன? மாலை
10. முனிவு என்பதன் பொருள் என்ன? சினம்
11. தமர் என்பதன் பொருள் என்ன? உறவினர்
12. அகத்து உவகை என்பதன் பொருள் என்ன? மனமகிழ்ச்சி
13. நீபவனம் என்பதன் பொருள் என்ன? கடம்பவனம்
14. மீனவன் என்பதன் பொருள் என்ன? பாண்டிய மன்னன்
15. கவரி என்பதன் பொருள் என்ன? சாமரை
16. நுவன்ற என்பதன் பொருள் என்ன? சொல்லிய
17. ஏன்னா என்பதன் பொருள் என்ன? அசைச் சொல்
18. பாண்டிய மன்னன் அணிந்திருந்த மாலை என்ன? வேப்பம் பூ மாலை
19. கேள்வியினான் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? வினையாலணையும் பெயர்
20. காடனுக்கும் கபிலனுக்கும் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? எண்ணும்மை
21. பாண்டிய மன்னன் என்னை இகழவில்லை. சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையும், சொல்லின் வடிவாக உன் இடப்புறம் இருக்கும் பார்வதி தேவியையும் இகழ்ந்து விட்டான் என்று சினத்துடன் கூறியவர் யார்? இடைக்காடனார்
22. இறைவன் யாருக்கு மனமகிழ்ச்சி உண்டாக்க நினைத்தார்? கபிலருக்கும், இடைக்காடனாருக்கும்
23. மோசிகீரனாருக்கு கவரி வீசிய மன்னன் யார்? தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
24. மாசற வசித்த வார்புறு வள்பின் என்ற புறநானூறு வரியை பாடியவர் யார்? மோசிகீரனார்
25. திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் யார்? பரஞ்சோதி முனிவர்
26. திருவிளையாடற் புராணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன? 3 (மதுரைக் காண்டம், கூடற்காண்டம், திருவாலவாயக் காண்டம்)
27. திருவிளையாடற் புராணத்தில் எத்தனை படலங்கள் உள்ளன? 64
28. பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார்? திருமறைக்காடு (வேதாரண்யம்)
29. பரஞ்சோதி முனிவர் காலம் என்ன? 17ஆம் நூற்றாண்டு
30. பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல்கள் யாவை? வேதாரண்ய புராணம், திருவிளையாடல் போற்றி கலிவெண்பா
31. மதுரை பதிற்றுப்பத்தந்தாதியை இயற்றியவர் யார்? பரஞ்சோதி முனிவர்