கிழவனும் கடலும்

கிழவனும் கடலும்

நூல் :  கிழவனும் கடலும்
ஆசிரியர் :  எர்னஸ்ட் ஹெமிங்வே
மொழி பெயர்ப்பாளர் :  மாடசாமி

அமெரிக்காவில் இருந்து வரும் பல படங்களில் சைக்லாஜிகல் ( படத்தில் வரும் கதாபாத்திரங்கள் எவராவது ஒருவர் தனக்கு தானே பேசிக்கொண்டு அல்லது மற்றவர்களை டார்ச்சர் செய்வது )  element கண்டிப்பாக இருக்கும்.எனக்கு என்ன தோனுதுனா மொத்த அமெரிக்காவே சைக்கோ தனமாதான் இருக்குமோ? Ok leave it.... Let's come to the point இக்கதையில் வரும் கிழவனும் ஒரு வகையில் தனது சிந்தையை இழந்து தன்னுடன் பல மணி நேரம் பேசுகிறார் even though he is in trouble but he is talking to him continuously.


இதுல கதைமாந்தர்கள் இரண்டே பேர்தான். ஒன்று சிறுவன் மற்றொன்று பெருசு. சிறுவனுக்கு பெருசுனா ரொம்ப பிடிக்கும் ( இவனும் பாதிக்க பட்டுருப்பானோ ? ) அதனால கடலுக்கு போனாலே பெருசு கூடதான் போவான் . பெருசும் பொழுது போகாமா இவன்கிட்ட "அந்த காலத்துல நாங்கள்லாம் கடலுக்கு போனா "அப்பிடினு ரம்பம் போடுவாறு இவனும் வேற வழி இல்லைனு கேட்டுட்டு இருப்பான். நாட்கள் நகர நகர பெருசுக்கு மீனே கிடைக்கிறதில்லை கடல்ல. அதனால சிறுவனோட அப்பா அவனை " இனிமேல் நீ அவரு கூட கடலுக்கு போகாத. நான் சொல்வறங்களோட போனு" சொல்றாங்க, இவனும் சரின்னு கேட்டுறான்.


கடலுக்கு இப்ப தனியா பெருசு போறாரு. இவருக்கு மீன் கிடைச்சதா இல்லையானுதான் கதை. Interesting ஆன partனு பார்த்தா இவர் ஒரு மீன் கூட சண்டை போடுறதுதான் . (அதுவும் சொல்ற மாதிரி இல்லை ஏன்னா அடிக்கடி அந்நியன் மாதிரி கேரக்டர் உள்ள வருது)

தன்னுடைய கடைசி காலத்துல குழந்தைகளோட தொல்லை தாங்க முடியாம பூங்கா , கடற்கரைனு போற பெருசுகளுக்கு மத்தியில் இந்த பெருசு மீனோட சண்டை போடுது. கதை பரவாயில்லை.

 " அது மீனில்லை , சுறா "