7th தமிழ் இயல் 4.1 கலங்கரை-விளக்கம்

7th தமிழ் இயல் 4.1 கலங்கரை-விளக்கம்
: :

1. கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பமே ----- ஆகும்? கலங்கரை விளக்கம்
2. "வானம் ஊன்றி மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? கடியலூர் உருத்திரங் கண்ணனார்
3. மதலை என்பதன் பொருள்? தூண்
4. ஞெகிழி என்பதன் பொருள்? தீச்சுடர்
5. அழுவம் என்பதன் பொருள்? கடல்
6. வேயா மாடம் என்பதன் பொருள்? வைக்கோல் போன்றவற்றால் வேயப்பட்ட திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்
7. சென்னி என்பதன் பொருள்? உச்சி
8. உரவுநீர் என்பதன் பொருள்? பெருநீர்ப் பரப்பு
9. கரையும் என்பதன் பொருள்? அழைக்கும்
10. கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர் யார்? உருதிரங்க கண்ணனார்
11. பரும்பாணாற்றுப்படை என்ற நூலை எழுதியவர் யார்? உருத்திரங் கண்ணனார்
12. பட்டினப்பாலை என்ற நூலை எழுதியவர் யார்? உருத்திரங் கண்ணனார்
13. பெரும்பாணாற்றுப் படையில் தலைவன் யார்? தொண்டைமான் இளந்திரையன்
14. வள்ளல் ஒருவனிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது? ஆற்றுப்படை இலக்கியம்
15. பத்துப்பாட்டு நூல்கள்? திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
16. வேயாமாடம் எனப்படுவது? சாந்தினால் பூசப்படுவது
17. உரவுநீர் - அழுவம் - - இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்? கடல்
18. கடலில் துறை கலங்குவன? மரக்கலங்கள்
19. தூண் என்னும் பொருள் தரும் சொல்? மதலை