6th தமிழ்-இயல் 3.1 அறிவியல்-ஆத்திசூடி

6th தமிழ் இயல் 3: எந்திரஉலகம்
3.1 அறிவியல்-ஆத்திசூடி
1. அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம் எது? ஆத்திச்சூடி
2. ஆத்திச்சூடி இயற்றியவர் யார்? ஒளவையார்
3. புதிய ஆத்திச்சூடி இயற்றியவர் யார்? பாரதியார்
4. அறிவியல் ஆத்திச்சூடி இயற்றியவர் யார்? நெல்லை சு. முத்து
5. "அறிவியல் சிந்தனை கொள் ஆய்வில் மூழ்கு" என்ற பாடலின் ஆசிரியர் யார்? நெல்லை சு. முத்து
6. இயன்றவரை என்ற சொல்லின் பொருள் என்ன? முடிந்தவரை
7. ஒருமித்து என்ற சொல்லின் பொருள் என்ன? ஒன்றுபட்டு
8. ஔடதம் என்ற சொல்லின் பொருள் என்ன? மருந்து
9. "தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்” என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் யார்? நெல்லை சு. முத்து
10. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர் யார்? நெல்லை சு. முத்து
11. நெல்லை சு. முத்து எத்தனை நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்? எண்பதுக்கும் மேற்பட்ட நூல்கள்
12. உடல் நோய்க்கு _____ தேவை? ஔடதம்
13. நண்பர்களுடன் _____ விளையாடு? ஒருமித்து
14. 'கண்டறி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன? கண்டு + அறி
15. 'ஓய்வற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன? ஓய்வு + அற
16. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன? ஏனென்று
17. ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன? ஔடதமாம்
18. அணுகு என்பதன் எதிர்ச்சொல் என்ன? விலகு
19. ஐயம் என்பதன் எதிர்ச்சொல் என்ன? தெளிவு
20. ஊக்கம் என்பதன் எதிர்ச்சொல் என்ன? சோர்வு
21. உண்மை என்பதன் எதிர்ச்சொல் என்ன? பொய்மை