எதிர்ச்சொல் Quiz -1

1. ‘உதித்த’ என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் எழுதுக. (28-01-2023 TNPSC)

(A) மறைந்த
(B) குறைந்த
(C) மிகுந்த
(D) விழுந்த

2. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் - உதித்த (29-01-2023 TNPSC)

(A) மறைந்த
(B) நிறைந்த
(C) குறைந்த
(D) தோன்றிய

3. எதிர்ச்சொல்லைக் கண்டறிக. 'இன்சொல்' (29-01-2023 TNPSC)

(A) இனிமையான சொல்
(B) இனிக்கும் சொல்
(C) இல்லாத சொல்
(D) வன்சொல்

4. எதிர்ச்சொல் தருக. 'வின்னம்' (29-01-2023 TNPSC)

(A) அழகற்ற
(B) பாதிப்பு
(C) வருத்தமில்லா
(D) சேதமற்ற

5. நல்கும் என்பதன் எதிர்ச்சொல்லைக் கண்டறிக. (07-02-2023 TNPSC)

(A) தரும்
(B) தராது
(C) வரும்
(D) வராது

6. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக - ஊக்கம் (07-02-2023 TNPSC)

(A) தெளிவு
(B) சோர்வு
(C) பொய்மை
(D) விலகு

7. "நீக்குதல்" என்பதன் எதிர்ச்சொல்லைக் கண்டறிக. (07-02-2023 TNPSC)

(A) போக்குதல்
(B) தள்ளுதல்
(C) அழித்தல்
(D) சேர்த்தல்

8. எதிர்ச் சொற்களைப் பொருத்துக. (13-02-2023 TNPSC)

(a) அணுகு - 1. தெளிவு
(b) ஐயம் - 2. சோர்வு
(c) ஊக்கம் - 3. பொய்மை
(d) உண்மை - 4. விலகு

A) 1 2 3 4
B) 2 3 4 1
C) 4 1 2 3
D) 2 1 3 4

9. எல் - என்பதன் எதிர்ச்சொல் தருக. (13-02-2023 TNPSC)

(A) இரவு
(B) பகல்
(C) காலை
(D) மாலை

10. "உழவன்" எதிர்ப்பாலுக்கு உரிய சொல் (13-02-2023 TNPSC)

(A) உழத்தியர்
(B) உழத்தி
(C) உழவி
(D) நுளைச்சி