8th தமிழ் இயல் 8.1 ஒன்றே-குலம்

1. "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? திருமூலர்
2. "படமாடக் கோயில் பகவர்க்குஒன்று ஈயில் பாடல் வரியை இயற்றியவர் யார்? திருமூலர்
3. நமன் என்பதன் பொருள் என்ன? எமன்
4. சித்தம் என்பதன் பொருள் என்ன? உள்ளம்
5. நம்பர் என்பதன் பொருள் என்ன? அடியார்
6. படமாடக்கோயில் என்பதன் பொருள் என்ன? படங்கள் அமைந்த மடங்களையுடைய கோயில்
7. நாணாமே என்பதன் பொருள் என்ன? கூசாமல்
8. உய்ம்மின் என்பதன் பொருள் என்ன? ஈடேருங்கள்
9. ஈயில் என்பதன் பொருள் என்ன? வழங்கினால்
10. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர்? திருமூலர்
11. பதினெண் சித்தர்களுள் ஒருவர்? திருமூலர்
12. திருமந்திரத்தை இயற்றியவர் யார்? திருமூலர்
13. திருமந்திரத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன? 3000பாடல்கள்
14. தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல்? திருமந்திரம்
15. திருமந்திரம் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டடுள்ளது? 10 - வது திருமுறையாக
16. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரை கவர வரும் ----- க் கண்டு அன்சமாட்டார்கள்? நமனை
17. ஒன்றே ----- என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்? குலம்
18. "நமனில்லை"என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? நமன் + இல்லை
19. நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? நம்பர்க்கங்கு