7th தமிழ் இயல் 7.1 விருந்தோம்பல்

1. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையானது எது? விருந்தோம்பல்
2. "மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு - நிர்உலையுள்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? முன்றுரை அரையனார்
3. மாரி என்பதன் பொருள் என்ன? மழை
4. வறந்திறந்த என்பதன் பொருள் என்ன? வறண்டிருந்த
5. புகவா என்பதன் பொருள் என்ன? உணவாக
6. மடமகள் என்பதன் பொருள் என்ன? இளமகள்
7. நல்கினாள் என்பதன் பொருள் என்ன? கொடுத்தாள்
8. முன்றில் என்பதன் பொருள் என்ன? வீட்டின் முன் இடம் (திண்ணை இங்கு வீட்டைக் குறிக்கிறது
9. பழமொழி நானுறு என்ற நூலின் ஆசிரியர் யார்? முன்றுரை அரையனார்
10. முன்றுரை அரையனார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்? நான்காம் நூற்றாண்டு
11. முன்றுரை அரையனார் எந்த சமயத்தை சேர்ந்தவர்? சமண சமயம்
12. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது? பழமொழி நானுறு
13. பழமொழி நானுறில் உள்ள மொத்த பாடல்கள் எத்தனை? 400 பாடல்கள்
14. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம்பெற்று இருக்கும் நூல் எது? பழமொழி நானுறு
15. மரம் வளர்த்தல் ----- பெறலாம்? மாரி
16. 'நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? நீர் + உலையில்
17. மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதுக? மாரியொன்று