6th தமிழ்-இயல் 5.1 ஆசாரக்கோவை

6th தமிழ்-இயல் 5.1 ஆசாரக்கோவை
: :

6th தமிழ் இயல் 5: பாடறிந்து ஒழுகுதல் - 
5.1 ஆசாரக்கோவை
1. "நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது? ஆசாரக்கோவை
2. நன்றியறிதல் என்ற சொல்லின் பொருள் என்ன? பிறர் செய்த உதவியை மறவாமை
3. ஒப்புரவு என்ற சொல்லின் பொருள் என்ன? எல்லோரையும் சமமாகப் பேணுதல்
4. நட்டல் என்ற சொல்லின் பொருள் என்ன? நட்புக் கொள்ளுதல்
5. ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்? பெருவாயின் முள்ளியார்
6. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது? கயத்தூர்
7. ஆசாரக்கோவை என்ற சொல்லின் பொருள் என்ன? நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
8. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது? ஆசாரக்கோவை
9. ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக் கொண்டது? நூறு
10. பிறரிடம் நான் ______ பேசுவேன்? இன்சொல்
11. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது _____ ஆகும்? பொறை
12. அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது? அறிவுடைமை
13. இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் எது? இவையெட்டும்
14. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது? நன்றி + அறிதல்
15. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது? பொறை + உடைமை
16. எந்த உயிருக்கும் செய்யக்கூடாதது எது? துன்பம்
17. நாம் யாருடன் நட்புக் கொள்ள வேண்டும்? நற்பண்புகள் உடையவரோடு