6th தமிழ்-இயல் 2.1 சிலப்பதிகாரம்

6th தமிழ் இயல் 2: இயற்கை இன்பம்
2.1 சிலப்பதிகாரம்
1. நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையையும் மழையின் பயனையும் போற்றும் நூல்? சிலப்பதிகாரம்
2. "திங்களைப் போற்றதும் திங்களைப் போற்றதும்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? இளங்கோவடிகள்
3. "மாமழைப் போற்றதும் மாமழைப் போற்றதும்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? இளங்கோவடிகள்
4. திங்கள் என்பதன் பொருள் என்ன? நிலவு
5. கொங்கு என்பதன் பொருள் என்ன? மகரந்தம்
6. அலர் என்பதன் பொருள் என்ன? மலர்தல்
7. திகிரி என்பதன் பொருள் என்ன? ஆணைச்சக்கரம்
8. பொற்கோட்டு என்பதன் பொருள் என்ன? பொன்மயமான சிகரத்தில்
9. மேரு என்பதன் பொருள் என்ன? இமயமலை
10. நாமநீர் என்பதன் பொருள் என்ன? அச்சம் தரும் கடல்
11. அளி என்பதன் பொருள் என்ன? கருணை
12. தேன் நிறைந்த ஆத்திமலர் மாலையை அணிந்த மன்னன் யார்? சோழ மன்னன்
13. காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் யார்? சோழ மன்னன்
14. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்? இளங்கோவடிகள்
15. இளங்கோவடிகள் எந்த மரபை சேர்ந்தவர்? சேர மரபு
16. இளங்கோவடிகள் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்? கி. பி. இரண்டாம் நூற்றாண்டு
17. ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்று எது? சிலப்பதிகாரம்
18. தமிழின் முதல் காப்பியம் எது? சிலப்பதிகாரம்
19. முத்தமிழ் காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது? சிலப்பதிகாரம்
20. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது? சிலப்பதிகாரம்
21. இரட்டைக் காப்பியங்கள் எவை? சிலப்பதிகாரம், மணிமேகலை
22. திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக அமைந்த நூல் எது? சிலப்பதிகாரம்
23. கழுத்தில் சூடுவது எது? தார்
24. கதிரவனின் மற்றொரு பெயர் என்ன? ஞாயிறு
25. வெண்குடை பிரித்து எழுதுக? வெண்மை + குடை
26. பொற்கோட்டு பிரித்து எழுதுக? பொன் + கோட்டு
27. கொங்கு + அலர் சேர்த்து எழுதுக? கொங்கலர்
28. அவன் + அளிபோல் சேர்த்து எழுதுக? அவனளிபோல்