10th தமிழ் இயல் 8.1 சங்க-இலக்கியத்தில்-அறம்
1. மன்னன் மக்களுக்கு கொடை அளிப்பது போன்ற 17ம் நூற்றாண்டு சுவரோவியம் எங்கு உள்ளது? சிதம்பரம்
2. சமயக் கலப்பிகல்லாத மானிட அறம் நிலவிய காலம் எது? சங்ககாலம்
3. எந்த காலத்தில் அறத்தை மனித உறவின் மையமாக கொண்டிருந்தனர்? சங்ககாலம்
4. சங்க காலத்திற்கு பிந்தைய அறஇலக்கியங்களின் காலத்தை எவ்வாஅழைக்கலாம்? அறநெறிக்காலம்
5. சங்க இலக்கிய அறங்கள் இயல்பானவை. 'கவிதை வாழ்க்கையின் திறனாய்வு' என்றவர் யார்? திறனாய்வாளர் அர்னால்டு
6. 'இம்சைச் செய்து மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்' என்று புறநானூறு பாடலை இயற்றியவர் யார்? ஏணிச்சேரி முடமோசியார்
7. சங்ககால வள்ளல்களில் ஒருவரான ஆய் பற்றி குறிப்பிட்டவர் யார்? ஏணிச்சேரி முடமோசியார்
8. சங்கப் பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் யாரை முதன்மைபடுத்தியே கூறப்பட்டுள்ளது? அரசர்கள்
9. அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியவர் யார்? ஊன் பொதிப் பகங்குடையார்
10. அரசன் அறநெறியில் ஆட்சி செய்ததற்கு அமைச்சரும் உதவினர் என்று "நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை" என்று கூறும் நூல்? மதுரைக்காஞ்சி
11. செம்மை சான்ற 'காவிதி மக்கள்' என்று அமைச்சர்களை போற்றியவர் யார்? மாங்குடி மருதனார்
12. 'அறம் அற க்கண்ட நெறிமான் அவையம்' என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது? புறநானூறு
13. எந்த ஊரில் உள்ள அறஅவையம் தனிசிறப்பு பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன? உறையூர்
14. மதுரையில் இருந்த அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்று கூறிய நூல் எது? மதுரைக்காஞ்சி
15. 'தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்யக்கூடாது' என்று கூறியவர் யார்? ஆவூர் மூலங்கிழார்
16. "எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எரிதலும் செல்லான்" என்ற புறநானூறு பாடலை இயற்றியவர் யார்? ஆவூர் மூலங்கிழார்
17. "செல்வத்துப் பயனே ஈதல்" என்ற புறநானூறு பாடலை பாடியவர் யார்? மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
18. கடையெழு வள்ளல்களின் கொடை பெருமை எந்த நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது? சிறுபாணாற்றுப்படை, பெருஞ்சித்திரனார் பாடல்
19. ஆற்றுப்படை இலக்கியங்கள் ----- இலக்கியங்களாக உள்ளன? கொடை இலக்கியம்
20. சேர அரசர்களின் கொடை பெருமையைப் பற்றி கூறும் நூல் எது? பதிற்றுப்பத்து
21. வள்ளல்கள் எவ்வாறெல்லாம் போற்றப்பட்டனர்? 'பசிப்பிணி மருத்துவன்', 'இல்லோர் ஒக்கல் தலைவன்'
22. வழங்குவதற்கு பொருள் உள்ளதா? என்று கூட பார்க்காமல் கொடுக்கும் பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தனை பாராட்டியவர் யார்? நக்கீரர்
23. வள்ளலின் பொருள் இரவலின் பொருள், வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை என்று கூறியவர் யார்? பெரும்பதுமனார்
24. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்றவர் யார்? ஒவையார்
25. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்று கூறியவர் யார்? நச்செள்ளையார்
26. பேகன் மறுமை நோக்கி கொடுக்காதவன் என்றவர் யார்? பரணர்
27. தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது தான் நாட்டை இழந்த துன்பத்தை விட பெருந்துன்பம் என குமணன் வருந்தியதாக கூறியவர் யார்? பெருஞ்சாத்தலைச் சாத்தனார்
28. எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியைக் பாராட்டியவர் யார்? கபிலர்
29. "ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது" என்று கூறும் நூல்? கலித்தொகையில்
30. தான் பெற்றதை பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் எந்த நூலால் புலப்படுத்தப்படுகிறது? புறநானூறு
31. உதவி செய்தலை "உதவியாண்மை" என்று கூறியவர் யார்? ஈழத்துப் பூதன் தேவனார்
32. உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்றவர் யார்? நல்வேட்டனார்
33. "பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அதன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்" என்று நல்லந்துவனார் பாடிய பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? கலித்தொகை
34. 'உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் தீர்ப்பதுதான்' என்று கூறியவர் யார்? நல்வேட்டனார்
35. 'உறவினர் கெட, வாழபவனின் பொலிவு அழியும்' என்று கூறியவர் யார்? பெருங்கடுக்கோ
36. செல்வம் என்பது சிந்தனையின் நிறைவு என்றது? தமிழ் இலக்கியம்
37. 'நிறைவடைகிறவனே செல்வன்' என்று கூறுவது? சீன நாட்டுத் தாவோயியம்
38. வாய்மை பேசும் நா உண்மையான நா என்ற கருத்தை இலக்கியங்கள் எவ்வாறு கூறுகின்றன? 'பொய்யாச் செந்நா', 'பொய்படுபறியா வயங்கு செந்நா'
39. ஓர் அதிசய திறவுகோல் என்பது எது? நா (நாக்கு)
40. இன்பத்தின் கதவை திறப்பதும், துன்பத்தின் கதவை திறப்பதும் எது? நா (நாக்கு)