வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் 2023

1. பொறித்த ______ வேர்ச்சொல்லை எழுதுக (10-12-2023 TNPSC)
(A) பொறித்த
(B) பொறி
(C) பொறிக்கப்பட்ட
(D) பொறிக்கப்பட்டு

2. வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல் : 'பாடுகிறாள்' என்னும் சொல்லின் வேர்ச் சொல் காண்க.  (10-12-2023 TNPSC)
(A) பா
(B) பாடு
(C) பாட்டு
(D) பாடி

3. கேட்டார் - இச்சொல்லின் வேர்ச்சொல் யாது? (09-12-2023 TNPSC)
(A) கேடு
(B) கெடு
(C) கேள்
(D) கேட்டு

4. வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல். 'வந்தேன்' என்னும் சொல்லின் வேர்ச் சொல் காண்க. (09-12-2023 TNPSC)
(A) வ
(B) வருக
(C) வா
(D) வருதல்

5. பொறித்த - வேர்ச்சொல்லை எழுதுக (09-12-2023 TNPSC)
(A) பொரி
(B) பொறி
(C) போரி
(D) பொறு  

6. "கிளர்ந்த" வேர்ச்சொல் அறிக (05-12-2023 TNPSC)
(A) கிளர்
(B) கிளர்ச்சி
(C) கிளர்ந்து
(D) கிளர்க்கப் பட்டு

7. "உரைத்த" - வேர்ச்சொல்லை அறிக (05-12-2023 TNPSC)
(A) உரைத்து
(B) உரைத்தது
(C) உரை
(D) உரைக்கப் பட்ட

8. வந்தனன் - வேர்ச்சொல்லை எழுதுக : (05-10-2023 TNPSC)
(A) வருக
(B) வந்து
(C) வா
(D) வருவாய்

9. "அறைந்தனன்" வேர்ச்சொல்லைத் தருக.(09-09-2023 TNPSC)
(A) அறை
(B) அறைந்து
(C) அறைந்த
(D) அறைதல்

10. வேர்ச்சொல்லைக் கண்டறிதல் - கேட்டார் (09-09-2023 TNPSC)
(A) கேல்
(B) கேழ்
(C) கேட்டு
(D) கேள்

11. "பேசினாள்" - இதன் வேர்ச்சொல்லை அறிக.(09-09-2023 TNPSC)
(A) பேசி
(B) பேசிய
(C) பேசு
(D) பேசியது