ஐங்குறுநூறு
TNPSC, TNPSC Group 4 இலக்கியம், TNPSC Group 4 பொதுத்தமிழ்,
11th தமிழ் இயல் 2 ஐங்குறுநூறு (நூல் வெளி) |
• ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு. • மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல். • திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள் கொண்டது. • ஐந்து திணைகளைப் பாடிய புலவர்கள்: குறிஞ்சித்திணை - கபிலர், முல்லைத்திணை - பேயனார், மருதத்திணை ஓரம்போகியார், நெய்தல் திணை அம்மூவனார், பாலைத்திணை - ஓதலாந்தையார். • ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். • இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார். • தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை. • பேயனார், சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். • இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன. |
1. மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது? (2022, 2019 Group 4)
(A) ஐங்குறுநூறு
(B) குறுந்தொகை
(C) கலித்தொகை
(D) புறநானூறு.
2. தவறான இணையைத் தேர்வு செய்க: (2019 Group 4)
(A) குறிஞ்சி – கபிலர்
(B) முல்லை – ஓதலாந்தையார்
(C) மருதம் – ஓரம்போகியார்
(D) நெய்தல் – அம்மூவனார்