தமிழ் மகளிரின் சிறப்பு

1. கோடிட்ட இடத்தை நிரப்புக:  தில்லையாடி வள்ளியம்மை ____ நாட்டில் பிறந்தார். (2013 Group 4)
a. அமெரிக்கா
b. இத்தாலி
c. இந்தியா
d. தென்னாப்பிரிக்கா.

2. கோடிட்ட இடத்தை நிரப்புக: (2013 Group 4)
கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர் _____?
a. தில்லையாடி வள்ளியம்மை
b. வேலுநாச்சியார்
c. இராணி மங்கம்மாள்.
d. ஜான்சி ராணி

3. சரியான விடையைக் கண்டறி : (2014 Group 4)
தில்லையாடி வள்ளியம்மை குறித்து காந்தி அடிகள்
a. வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்
b. வள்ளியம்மை சிறைத் தண்டனைக்கு வருந்தவில்லை
c. வள்ளியம்மை உடல் நலிவுற்றுள்ளார்
d. நம்பிக்கை தான் வள்ளியம்மையின் ஆயுதம்.

4. வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில் கூறினார்? (2016 Group 4)
a. இந்தியன் ஒப்பினியன்
b. டிஸ்கவரி ஆப் இந்தியா
c. தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்.
d. யங் இந்தியா

5. காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை (2018 Group 4)
a. ஓராயிரத்து முப்பத்து நான்கு
b. ஈராயிரத்து முப்பத்து நான்கு.
c. மூவாயிரத்து முப்பத்து நான்கு
d. நான்காயிரத்து முப்பத்து நான்கு

6. தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர் யார்? (2019 Group 4)
a. இராணி மங்கம்மாள்.
b. ஜான்சி ராணி
c. தில்லையாடி வள்ளியம்மை
d. வேலுநாச்சியார்

7. தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்? (2019 Group 4)
a. திலகவதி
b. தில்லையாடி வள்ளியம்மை.
c. ஜான்சிராணி
d. நாகம்மை
 
8. ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது? (2022 Group 4 Tamil) 
A) கி.பி.1730. 
B) கி.பி.1880 
C) கி.பி.1865 
D) கி.பி.1800 

9. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்? (2022 Group 4 Gk) 
(அ) மூவலூர் ராமாமிர்தம் 
(ஆ) முத்துலெட்சுமி ரெட்டி.
(இ) தர்மாம்பாள் 
(ஈ) பண்டிதர் ராமாபாய்