ம.பொ.சிவஞானம்
ம.பொ.சிவஞானம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
1. மேற்கத்தியர் மேற்கொண்ட கடல்வழிக் குதிரை வணிகம், 17 - ம் நூற்றாண்டுச் சுவரோவியம் காணப்படும் இடம்? திருப்புடைமருதூர்
2. இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறப்பான ஆண்டு எது? 1906 ம் ஆண்டு
3. காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போரை தென் ஆப்ரிக்காவில் தொடங்கிய ஆண்டு என்ன? 1906 - ம் ஆண்டு
4. வ. உ. சி அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுத்தசிக் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ஆண்டு? 1906
5. ம. பொ. சி எந்த ஆண்டு எங்கு பிறந்தார்? ஜுன் 26, 1906, சென்னை ஆயிரம் விளக்கு, சால்வன்குப்பம்
6. ம. பொ. சி யின் பெற்றோர் யாவர்? பொன்னுச்சாமி, சிவகாமி
7. ம. பொ. சி க்கு பெற்றோர் வைத்த பெயர் என்ன? ஞானப்பிரகாசம்
8. ம. பொ. சி யை 'சிவஞானி 'என்று அழைத்தவர் யார்? சரப்பையர் என்ற முதியவர்
9. ம. பொ. சி யின் கல்வி எந்த வகுப்புடன் முடிவுபெற்றது? மூன்றாம் வகுப்பு
10. ம. பொ. சி என அழைக்கப்படுபவர் யார்? ம. பொ. சிவஞானம்
11. ம. பொ. சி யின் தாயார் எந்த பாடலை பாடினார்? அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை
12. ம. பொ. சி யாருடைய பாடல்களை விரும்பி பாடினார்? சித்தர் பாடல்கள்
13. ஒருவன் அறிவு விளக்கம் பெற உள்ள இரண்டு வழிகள் யாது? கல்வி, கேள்வி
14. ம. பொ. சி யின் கேள்வி ஞானத்தை பெருக்கிய பெருமை யாருக்கு மிகுந்த பங்கு உண்டு? திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடியார்கள்
15. ம. பொ சி தன் வாழ்நாளில் தான் சேர்த்து வைத்த சொத்தாக எதைக் குறிப்பிடுகிறார்? தான் சேர்த்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை
16. பேராயக் கட்சி என்ற கட்சி எது? காங்கிரஸ் கட்சி
17. காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு எது? 1931ம் ஆண்டு
18. ம. பொ. சி எந்த கட்சி ஊர்வலங்களில் கலந்துகொண்டார்? காங்கிரஸ் கட்சி
19. 30. 9. 1932 இல் 'தமிழா துள்ளி எழு ' என்னும் தலைப்புடைய துண்டறிக்கையை கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடம் மக்களிடம் வழங்கியதாகாக சிறையில் அடைக்கப்பட்டவர்? ம. பொ. சி
20. பாண்டியன் ஆண்ட பெருமை, சோழன் ஆண்ட சிறப்பு, சேரன் ஆண்ட மாண்பினைக் கூறி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தவர் யார்? ம. பொ. சி
21. ம. பொ. சி க்கு எத்தனை மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது? மாத சிறை தண்டனை, 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது (வறுமையால் பணம் கட்டத்தவறியதால் மேலும் 3 மாதம்)
22. ம. பொ. சி க்கு சிறையில் எந்த வகுப்பு உணவு கிடைத்தது? சி. வகுப்பு உணவு
23. 'இந்தியாவை விட்டு வெளியேறு ' என்ற தீர்மானத்தை பம்பையில் காங்கிரஸ் கட்சி எந்த ஆண்டு நிறைவேற்றியது? ஆகஸ்ட் 8, 1942ஆம் ஆண்டு
24. ம. பொ. சி மீண்டும் எந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்? ஆகஸ்ட் 13, 1942 ஆம் ஆண்டு, வேலூர் சிறை
25. ம. பொ. சி வேலூர் சிறையில் கண்ட தென்னகத் தலைவர் யாவர்? காமராஜர், தீரர் சத்யமூர்த்தி, பிரகாசம்
26. ம. பொ. சி வேலூர் சிறையில் இருந்து எந்த சிறைக்கு மாற்றப்பட்டார்? அமராவதி சிறை
27. அமராவதி சிறை மேற்கூரை எதனால் வேயப்பட்டிருந்தது? துத்தநாகத் தகடு
28. ம. பொ. சி. யாருடைய அழைப்பை ஏற்று வடகொள்ளைக்குச் சென்றார்? ஆசிரியர் மங்கலக்கிழார் 55 வயது பெரியவர் அழைப்பை ஏற்று
29. ஆந்திரத் தலைவர்கள் எந்த பகுதியை ஆந்திராவுடன் இணைக்க விரும்பினார்? சித்தூர் மாவட்டம்
30. வடகொள்ளைத் தமிழர்கள் ஒன்றிணைத்து தமிழ் உணர்வு கொள்ள செய்தவர் யார்? தமிழாசான் மங்கலங்கிழார்
31. வடகொல்லை போராட்டம் எந்த பகுதிகளில் தொடங்கியது? சித்தூர். புத்தூர், திருத்தணி
32. யாருடன் இணைத்து 'தமிழரசு கழகம் ' சென்னை மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் தமிழர் மாநாடு நடைபெற்றது? மங்கலங்கிழார்
33. வடகொல்லை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் யாவர்? ம. பொ. சி, மங்கலக், விநாயகம், கிழார் ஈ. எஸ். தியாகராஜன், ரஷீத்
34. ராஜமுந்திரி சிறையிலேயே உயிர் துறந்தவர் யார்? திருவாலங்காடு கோவிந்தராஜன்
35. பழனி சிறையில் உயிர் துறந்தவர் யார்? மாணிக்கம்
36. மொழிவாரி வாரியம் யார் தலைமையில் அமைக்கப்பட்டது? சர்தார். கே. எம். பணிக்கர்
37. மொழி வாரி வாரியம் மூலம் சித்தூர் எதனுடன் இணைக்கப்பட்டது? ஆந்திர மாநிலம்
38. 'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்'என்று முழங்கியவர்கள்? ம. பொ. சி
39. ம. பொ. சி க்கு தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென்றால் அது? சிலப்பதிகாரம்
40. இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொது சொத்து என கூறியவர்? ம. பொ. சி
41. பட்டி தொட்டியங்கும் எந்த மாநாடு நடைபெற்றது? சிலப்பதிகார மாநாடு
42. திருத்தணி வரை உள்ள பகுதிகளில் தமிழகத்திற்கு சொந்தம் என கூறிய ஆணையம்? படாஸ்கர் ஆணையம்
43. ஆந்திர மாநிலம் பிரியும்போது அத தலைநகராக எந்த நகரம் இருக்க வேண்டும் என்று ஆந்திர தலைவர்கள் விரும்பினார்? சென்னை
44. தலைநகரை காக்க தன் முதலமைச்சர் பதவியை துறக்கவும் முன்வந்தவர் யார்? ராஜாஜி
45. எந்த நீதிபதி தலைமையில் ஆனா ஒரு நபர் ஆணையம் ஆந்திரவிற்கு சென்னை தலைநகர் என்று பரிந்துரை செய்தது? நீதிபதி வாஞ்சு
46. தலைநகரை மீட்க மாநகராட்சியின்சிறப்பு கூட்டத்தை நடத்தியவர்? மாநகரத் தந்தை செங்கல்வராயன்
47. தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்று முழங்கியவர் யார்? ம. பொ. சி
48. பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் சென்னை தமிழருக்கே என்று அறிவித்த நாள் எது? 25. 03. 1953
49. தமிழக வடக்கு - தெற்கு எல்லைக் கிளர்ச்சினைக் தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்தவர் யார்? தமிழரசுக் கழகம்
50. தெற்கொள்ளை போராட்டம் நடைபெற்ற ஆண்டு என்ன? 1953 - 1954
51. எல்லை போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் முதன்மையானவர்களில் யாவர்? பி. எஸ். மணி, ம. சங்கரலிங்கம்
52. தெற்க்கெல்லை போராட்டத்தின் பொது துப்பாக்கிச் சூட்டில் இறந்த தமிழரசுக் கழக தோழர்கள் யார்? நேசமணி
53. தென் திருவிதாங்கூரில் செல்வாக்கு படைத்தவர் யார்? நேசமணி
54. இளம்வயதிலேயே சமூக விடுதலைக்காக போராடியவர், வழக்கறிஞர், நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும்இருந்தவர் யார்? நேசமணி
55. குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர் யார்? நேசமணி
56. மார்ஷல் நேசமணி என்று அழைக்கப்பட்டவர் யார்? ஏ. நேசமணி
57. எந்த ஆண்டு கன்னியாகுமாரி மாவட்டம் தமிழ்நாட்டின் இணைத்து? நவம்பர்1, 1956ஆண்டு
58. நேசமணி நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சிலையோடு மணிமண்டபம் எங்கு அமைந்தது? நாகர்கோவில்
59. திருவிதாங்கோர் ஆட்சி அகன்று எந்த மாநிலம் உருவானது? கேரளா மாநிலம்
60. தமிழக மற்றும் கேரளா பகுதிகளை பிரிக்க அமைக்கப்பட்ட ஆணையம்? பசல் அலி ஆணையம்
61. தமிழக மற்றும் கேரளா பகுதிகளை பிரித்து பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்கு தந்த பரிந்துரை வெளியான ஆண்டு? 1955 அக்டோபர் - 10
62. சென்னை மாநிலத்தில் உள்ள எந்த பகுதி கேரளாவுடன் இணைந்து? மலபார் மாவட்டம்
63. திருவிதாங்கூர் - கொச்சி ராஜ்ஜியத்தில் இருந்த எந்த பகுதி தமிழகத்துடன் இணைந்தது? கல்குளம், விளவங்கோடு, தோவானை, அசத்தீசுவரம், செங்கோட்டை
64. நம்மை விட்டு போன தமிழக பகுதிகள் யாவை? தேவிக்குளம், பீர்மேடு
65. தமிழகத்தின் வடகோல்லை என புறநானூறு, சிலப்பதிகாரம் கூறுகிறது? வேங்கட மலை
66. தமிழகத்தில் தெற்கொல்லை எது என புறநானூறு சிலப்பதிகாரம் கூறுகிறது? குமரி முனை
67. எந்த அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அறிய கையெழுத்து சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது? ஆஸ்திரிய நாட்டு தலைநகரில் உள்ள அருங்காட்சியகத்தில்
68. தமிழக வணிகருக்கும், கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம் எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது? ஆஸ்திரேலியா நாட்டு தலைநகரில் உள்ளது அருங்காட்சியகத்தில்
69. ஆஸ்திரிய நாட்டு தலைநகர்? வியன்னா
70. எனது போராட்டம் என்னும் தன்வரலாற்று நூலை எழதியவர் யார்? ம. பொ. சி
71. சிலம்புச்செல்வர் என்று போற்றப்படுபவர் யார்? ம. பொ. சி
72. ம. பொ. சியின் காலம் என்ன? 1906 - 1995
73. தமிழிலரசுக் கழகத்தை தொடங்கியவர் யார்? ம. பொ. சி
74. ம. பொ. சி சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்த காலம் என்ன? 1952 - 1954 வரை
75. ம. பொ. சி சட்டமன்ற மேலவை தலைவராக இருந்த காலம் என்ன? 1972 முதல் 1978 வரை
76. ம. பொ. சி 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ' என்னும் நூலுக்காக சாகித்திய அகாடமி விருது வழங்கிய ஆண்டு? 1966
77. தமிழக அரசு ம. பொ. சிக்கு சிலைவைத்த இடங்கள் யாவை? சென்னை தியாகராய நகரிலும், திருத்தணியிலும்