6th தமிழ்-இயல் 4.1 மூதுரை
6th தமிழ் இயல் 4:கண்ணெனத்-தகும்
4.1 மூதுரை
1. அழியாச் செல்வம் எது? கல்வி
2. "மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்" என்ற மூதுரை பாடலைப் பாடியவர் யார்? ஒளவையார்
3. மாசற என்ற சொல்லின் பொருள் என்ன? குற்றம் இல்லாமல்
4. சீர்தூக்கின் என்ற சொல்லின் பொருள் என்ன? ஒப்பிட்டு ஆராய்தல்
5. தேசம் என்ற சொல்லின் பொருள் என்ன? நாடு
6. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களை இயற்றியவர் யார்? ஒளவையார்
7. மூதுரை என்ற நூலின் ஆசிரியர் யார்? ஒளவையார்
8. மூதுரை என்ற சொல்லின் பொருள் என்ன? மூத்தோர் கூறும் அறிவுரை
9. மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை? 31
10. மாணவர்கள் நூல்களை _____ கற்க வேண்டும்? மாசற
11. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன? இடம் + எல்லாம்
12. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன? மாசு + அற
13. குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது என்ன? குற்றமில்லாதவர்
14. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது என்ன? சிறப்புடையார்